கார்த்திக் யார் என்ற உண்மை ரேவதிக்கு தெரியவருமா? பிரிந்த குடும்பம் சேருமா? கார்த்திகை தீபம்!
சென்னை: சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வந்த அபிராமி கார்த்திக் ரேவதியை ஆசிர்வாதம் செய்கிறாள். நீண்ட இடைவெளிக்கு பிறகு அபிராமி மற்றும் ராஜராஜன் சந்தித்துக்கொள்ள, அபிராமி அண்ணா என கூப்பிட அண்ணாவா என்று எல்லோரும் கேட்க சிலர் சம்மந்தியை அப்படித்தான் கூப்பிடுவாங்க என்று சொல்லி சமாளிக்கிறாள். அதன் பிறகு ரேவதியை தனியாக சந்தித்து பேசுகிறாள். அப்போது ரேவதி உங்க பையன் இப்படி செய்வார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்கிறாள். உடனே அபிராமி என் பையன் தப்பு பண்ணி இருக்க மாட்டான், நிச்சயமா அவன் உன்னை நல்லா பார்த்துக்கொள்வான் என்று சொல்கிறாள். அப்போது, ரேவதி, உங்க மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. உங்க புள்ளையோட யோக்கியதை என்ன என்று எனக்குத் தெரியும், இந்த வீட்டுக்குள்ள டிரைவரா வந்து, நல்லவன் போல நடிச்சு என் அம்மாவை நம்ப வெச்சு கடைசியில் என் கழுத்துல தாலி கட்டிட்டான் என்கிறாள். இதைத்தொடர்ந்து அபிராமி இருவரையும் ஆசிர்வாதம் செய்துவிட்டு கிளம்புகிறாள்.
இதையடுத்து, இன்றைய எபிசோடில், மயில்வாகனம் பரமேஸ்வரி பாட்டிக்கு போன் போட்டு, என்னுடைய பேரப்பிள்ளைகளுக்கு விருந்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக சொல்கிறாள். உடனே மயில்வாகனம் அவ்வளவு தானே, கல்யாணத்தையே பண்ணிவிட்டோம், விருந்து வைக்க முடியாதா என்ன, நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி போனை வைக்கிறான். வீட்டிற்குள் வந்த மயில்வாகனம், ராஜராஜனிடம் ரகசியமாக விஷயத்தை சொல்ல, இருவரும் ட்ராமா ஒன்றை போட சாமுண்டீஸ்வரி கார்த்தியையும் ரேவதியையும் அவங்க வீட்டிற்கு விருந்துக்கு அனுப்புவாள் என்று பிளான் போட , அதன்படியே அவளும் விருந்துக்கு அனுப்ப சம்மதிக்கிறாள். அவங்க பொறாமைப்பட்டு கஷ்டப்படட்டும் என்று சொல்கிறாள். ரேவதியும் விருந்துக்கு செல்ல சம்மதம் சொல்கிறாள்.

பாட்டி கொடுத்த விருந்து: இதை தொடர்ந்து கார்த்திக் ரேவதி பைக்கில் ஒன்றாக செல்ல கார்த்திக் ரேவதியை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறான். மறுபக்கம் பாட்டி விருந்துக்கு தடபுடலாக ஏற்பாடு செய்து வைக்கிறார். கார்த்திக் தாத்தா பாட்டியுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து மறைத்தும் வைக்கிறாள். அடுத்து கார்த்திக் ரேவதி வீட்டிற்கு வர பாட்டி அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்கிறார். ரேவதியை வீட்டில் விளக்கேற்றிய பிறகு கார்த்தியுடன் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். அப்போது, பாட்டி எந்த குறையும் இல்லாமல், இரண்டு பேரும் நல்லா சந்தோஷமாக இருக்கணும், உங்க வயித்துல என் அப்பன் முருகனே புள்ளையாக பிறக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்கிறாள்.

சபதம் எடுத்த கார்த்திக்:அப்போது ரேவதி, பாட்டி நான் ஆசைப்பட்டபடி கல்யாணம் நடந்து சந்தோஷமா இந்த வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், இப்போ எல்லாமே தலைகீழா மாறிவிட்டது என்று சொல்லி வருத்தப்படுகிறாள். அப்போது, பாட்டி, ஏம்மா அப்படி சொல்ற,நீ என் பேரனைத்தானே கல்யாணம் பண்ணி இருக்க என்று சொல்ல ரேவதி என்ன ... ராஜா உங்க பேரனா என்று கேட்கிறாள். பின்ன நீ என் பேத்தினா.. கார்த்திக் என் பேரன் தானே என்று சமாளித்துவிடுகிறாள். அதன் பின், அத்தை குடும்பத்தோடு சேரவேண்டும் என நினைத்தால் மேலும் பயமாகிவிட்டதே பாட்டி என்று வருத்தப்படும் கார்த்திக், நிச்சயம் பிரிந்த ரெண்டு குடும்பத்தையும் சீக்கிரம் சேர்ப்பேன் பாட்டி என்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











