சாமுண்டீஸ்வரி கொடுத்த ஷாக்.. கார்த்திக் சமாளிக்க போவது எப்படி? கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: முதலிரவு அறைக்கு கார்த்திக் வந்ததும், கடுப்பான ரேவதி, என் அம்மாவிற்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா, அம்மாவுக்காக இவ எல்லாத்தையும் பொறுத்துப்பான்னு தப்பு கணக்கு போட்டுக்கிட்டு, என்கிட்ட நெருங்கின நான் உயிரோடவே இருக்க மாட்டேன். என்று சொல்லிவிட்டு கீழே பாயை போட்டு கொண்டு, நான் தரையில் படுத்து கொள்கிறேன். இப்போ நீங்க இந்த வீட்டில் டிரைவர் கிடையாது எங்க வீட்டோட மாப்பிள்ளை, நீங்க கட்டில் படுத்துக்கிட்டா தான் சரியாக இருக்கும் என்று சொல்கிறாள்.
ரேவதியின் பேச்சை கேட்டு கார்த்திக் மிகவும் மனம் உடைந்து போகிறான். அடுத்த நாள் காலை கார்த்திக் இன்ஸ்பெக்டர் ஒருவரை சந்தித்து மகேஷை கண்டு பிடிக்கணும், அவன் வந்தா தான் ரேவதிக்கு என்னை பற்றி புரிய வைக்க முடியும் என பேசுகிறான். இன்னொரு பக்கம் மாயா, சந்திரகலா மற்றும் சிவனாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து புதிதாக ஒரு திட்டத்தை போடுகின்றனர். பின் சிவனாண்டி, மாயாவிடம் மகேஷ் காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்க சொல்கின்றனர். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சிவனாண்டி மாயாவிடம் மகேஷ் காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்க சொல்ல அவளும் எனக்கு மகேஷ் கண்டிப்பாக வேணும், அவனுக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்லிவிட்டு வெளியில் கிளம்புகிறாள். மாயா வெளியே சென்றதும், சிவனாண்டி, சந்திரகலாவிடம் இந்த மாதிரி ஆள் தான் நமக்கு தேவை.. நான் செய்ய நினைக்குறதை யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் இவங்களை வச்சி செய்துட்டு போய்டலாம் என்று திட்டத்தை சொல்கிறான்.
சிக்கலில் அபிராமி: மறுபக்கம் வீட்டில் சாமுண்டீஸ்வரி, கார்த்தியிடம் கல்யாணம் ஆன பிறகும் உங்க அம்மா ஏன் வரவே இல்லை என்று கேட்கிறாள். மேலும் உங்க அம்மா வீட்டில் தானே இருக்காங்க போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க என்று சொல்ல கார்த்திக் அவங்க கோவிலுக்கு போய் இருப்பதாக சமாளிக்கிறான். உடனே,சாமுண்டீஸ்வரி எப்பவும் அவங்க கோவிலில் தான் இருப்பாங்களா என்று கேட்க, கார்த்திக் ஆமாம் அவங்களுக்கு பக்தி அதிகம் என சமாளிக்கிறான். சரி அம்மாவிற்கு போன் போட்டு கொடுங்க நான் பேச வேண்டும் என்று சொல்ல, கார்த்திக் வெளியே சென்று அம்மாவுக்கு போன் செய்து பேசி விட்டு சாமுண்டீஸ்வரியிடம் கொடுக்கிறான்.

பிறகு அபிராமி கடவுளிடம் நான் அங்க போனா பிரச்சனை எதுவும் வர கூடாது என கடவுளிடம் வேண்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











