பரபரப்பான தேர்தல் பிரச்சாரம்.. சாமுண்டீஸ்வரியின் இடுப்பை கிள்ளிய சிவனாண்டி.. கார்த்திகை தீபம்!

சென்னை: சாமுண்டீஸ்வரி, சிவனாண்டி என இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரச்சாரத்தை தொடங்கினார்கள். முத்துவேல் மற்றும் சிவனாண்டி என இருவரும் கூட்டு சேர்ந்து தமிழ் தெரியாத ஒரு நடிகையை இறக்கி ஓட்டு சேகரிக்க முடிவெடுக்கின்றனர். இதற்காக ஒரு நடிகையை ஏற்பாடும் செய்ய நடிகை வரும் விஷயம் அறிந்து மொத்த ஊரும் அவரை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. கார்த்திக் தமிழ் தெரியாத நடிகை என்பதால் இதை சாதகமாக பயன்படுத்தி மயில்வாகனத்தை வைத்து அந்த நடிகை படிக்க இருந்த லெட்டரை மாற்றி வைக்கிறான். பிறகு நடிகை அந்த லெட்டரில் இருப்பதை அப்படியே படிக்க அதில் சாமுண்டீஸ்வரியை பாராட்டியும் சிவனாண்டியை விமர்சித்தபடியும் இருக்கிறது.

பிறகு சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரி பாட்டி ஊருக்கு வர பாட்டி அவளை சாப்பிட வீட்டுக்கு கூப்பிட சாமுண்டீஸ்வரி முடியாது என மறுக்க ஊர்க்காரர்கள் போயிட்டு சாப்பிடுங்க என்று சொல்கின்றனர். பரமேஸ்வரி பாட்டி, நீ எவ்வளவு தான் நாங்க வேண்டாம் என்று சொன்னாலும், நீ தான் என் மருமகள். இவ்வளவு தூரம் வந்துட்ட, வீட்டுக்குள்வா நான் விருந்துக்கு ஏற்பாடு செய்து வைத்து இருக்கிறேன் என்கிறாள். இதைக்கேட்டு கோவப்படும் சாமுண்டீஸ்வரி, என்னது சாப்பிட வேண்டுமா, ஏதோ போனா போகிறது என்று ஆரத்தி எடுப்பதற்கு ஓகே சொன்னோன், சாப்பிட எல்லாம் முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அப்போது கார்த்திக், அத்தை முதலில் வீட்டிற்குள் போங்க, ஊர் மக்கள் அனைவரும் பார்க்கிறார்கள் என்கிறான். பின ஊர் மக்கள் அனைவரும் கட்டாயப்படுத்த சாமுண்டீஸ்வரி தவிர்க்க முடியாமல் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்குச் சென்று சாப்பிடுகிறாள். இதைப் பார்த்து ரேவதி, துர்கா, ரோகிணி என அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால், சந்திரகலா, இந்த குடும்பத்தோட சாமுண்டீஸ்வரி சேர்ந்துவிடுவாள் போலயே என ஆத்திரப்படுகிறாள்.

கண்டுபிடிக்கும் கார்த்திக்: சிவனாண்டி மற்றும் சந்திரகலா ஆகியோர் சாமுண்டீஸ்வரியை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். அடுத்ததாக சாமுண்டீஸ்வரி பிரச்சாரம் செய்யும்போது ஒருவன் மாலை போட வந்து சாமுண்டீஸ்வரி இடுப்பை பிடித்துக் கிள்ள சாமுண்டீஸ்வரி கோபப்பட்டு அவனை அறைகிறாள். இதனால் அந்த நபர் சுருண்டு கீழே விழ சிவனாண்டி இதை சாதகமாக பயன்படுத்தி சாமுண்டீஸ்வரி மீது புகார் அளிக்க அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர். இதையடுத்து கார்த்திக் அங்கு வந்து இதுக்கு பின்னாடி இருக்கும் மர்மத்தை நான் கண்டுபிடிக்கிறேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க என்று சாமுண்டீஸ்வரிக்கு ஆறுதல் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X