கார்த்திக் என் புருஷன்.. ரேவதி கொடுத்த தரமான பதிலடி.. ஷாக்கான சந்திரகலா..கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில் சந்திரகலா, ரேவதியை தனியாக கூப்பிட்டு கார்த்திக் இனிமேல் இந்தவீட்டில் இருக்க முடியாது, அவன் தான் ராஜசேதுபதியோட மகன் என்கிறார். அப்போது, சந்திரகலா அதற்கான ஆதாரம் என்னுடைய ஃபோனில் இருக்கிறது என்று சொல்லி போனை காட்டுகிறாள். இந்த ஆதாரத்தை காட்டி, கார்த்தியை இந்த வீட்டை விட்டே அனுப்புகிறேன் என்கிறாள். இதைக் கேட்ட ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். சந்திரகலா சித்தி சும்மாவே இருக்கமாட்டாங்க போல, இவங்களுக்கு ஏன் கார்த்திக் மீது இவ்வளவு வன்மம். எதற்கு அவரை இந்த வீட்டைவிட்டுஅனுப்ப வேண்டும் என நினைக்கிறார்கள் என்ற தெரியவில்லை என யோசிக்கிறார்.
எப்படியாவது அந்த வீடியோ மற்றும் பத்திரத்தை எடுத்துவிட வேண்டும் என, திட்டம் போடும் ரேவதி, சந்திரகலாவின் ஃபோனி இருந்த அந்த வீடியோவை டெலிட் செய்துவிடுகிறாள். பின், பத்திரத்தை பீரோவில் இருந்த சந்திரகலாவுக்கு தெரியாமல் எடுக்கிறாள். அந்த நேரத்தில் பீரோவில் எதையோ எடுக்க சந்திரகலா வர, பீரோவிற்கு பின்னால் ரேவதி மறைந்து சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில்,சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்ததும், சந்திரகலா பீரோவில் வைத்து இருக்கும் பத்திரத்தை காட்டுவதற்காக பீரோவில் தேடுகிறாள். ஆனால், பத்திரம் இல்லாததால், வீடியோவை காட்டிவிடலாம் என்று அக்கா வந்து ஒரு முக்கியமான விஷயம் என்று சொல்ல, உனக்கு என்ன அப்படி முக்கியயமான விஷயம் இருக்கப்போது, என் மருமகன் ராஜாவை பற்றித்தான் தப்பா சொல்லுவ என்று சொல்கிறாள். நீ இப்படி சொல்லுவேனு தெரிஞ்சு தான் ஆதாரத்தோட கொண்டு வந்து இருக்கேன். அபிராமி இறந்த பிறகு அபிராமியோட முழு சொத்தும் ராஜா பேருல ரிஜிஸ்டர் பண்ணி இருக்காங்க. அதுல கையெழுத்தை போடும்போது எடுத்த வீடியோ தான் இந்தா பாரு என்று சந்திரகலா, சாமுண்டீஸ்வரி இடம் கொடுக்கிறாள்.
டெலிட்டான வீடியோ: அந்த வீடியோவை பார்த்த சாமுண்டீஸ்வரி கடுப்பாயி இதுதான் ஆதாரமா.. என்று காட்ட அதில் வேறு ஏதோ வீடியோ ஓடிக்கொண்டிருக்கிறது. பின், சந்திரகலா போனில் தேடி பார்க்கிறாள். ஆனால், அந்த வீடியோ இல்லை எப்படி இந்த வீடியோ டெலிட் ஆனது என்று அவளுக்கு குழம்புகிறாள். மேலும் சந்திரகலா போனில் இருந்த வீடியோ எங்க போச்சு என்று, இந்த விஷயத்தை நான் ரேவதியிடம் தானே சொன்னோம். அவள் தான், டெலிட் செய்து இருப்பாளா என்கிற குழப்பம் வருகிறது. பின் ரேவதி, இதுபற்றி கேட்க, அதை நான் தான் டெலீட் பண்ணேன் என்று பதிலடி கொடுக்கிறாள். கார்த்திக் இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்க தான் வந்திருக்காரு என்று எனக்கு நல்லாவே தெரியும் என சொல்ல சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள்.
சாப்பாட்டில் பல்லி: பிறகு நான் வெஜ் ஆர்டர் செய்து எல்லாரையும் சாப்பிட கூப்பிட கார்த்திக் மறுக்க முடியாமல் சாப்பிட உட்காருகிறான். மயில்வாகனம் போன் செய்து அந்த சாப்பாட்டை சாப்பிடாதீங்க என்று கார்த்தியிடம் சொல்ல கார்த்திக் அதில் பல்லி விழுந்து இருப்பதாக சொல்கிறான்.. ஆனால், இதை நம்ப மறுக்கும் சந்திரகலா நான் வெஜ்ஜை ரசித்து ருசித்து சாப்பிட துர்காவை பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரும் சாப்பிடுகின்றனர். எல்லாரும் மயங்கி விழுகின்றனர். ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட சந்திரகலா, கார்த்திக், மயில் வாகனம் மீது பழி போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











