சுவாதியின் மானம் பறிபோகுமா.. ஓட்டலில் நடக்கப்போவது என்ன.. கார்த்திகை தீபம்!

சென்னை: வெள்ளிக்கிழமை ரேவதி ஆஸ்திரேலியா கிளம்பி செல்கிறாள். ஆனால், கார்த்திக் மீது இருக்கும் காதலால், அவளுக்கு பிரிந்து செல்ல மனம் வரவில்லை. ரேவதியை கார்த்திக் விமான நிலையத்தில் விட்டு விட்டு கிளம்பி விடுகிறான். அப்போது, விமான நிலையத்திலிருந்து கார்த்திற்கு அவசரமாக வரும்படி ஃபோன் வர, கார்த்திக் பதறியடித்துக் கொண்டு வருகிறான். அப்போது ரேவதி, கையில் கட்டுடன் இருப்பதை பார்த்து பதறுகிறான். இதனால் விமானத்தில் பயணிக்க முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார்கள், மூன்று மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் என்று ரேவதி சொல்ல, கார்த்திக் ரேவதியை வீட்டுக்கு அழைத்து வருகிறான். இதையடுத்து, கார்த்திக் மருத்துவர் கொடுத்த மாத்திரையை ரேவதிக்கு எடுத்து கொடுக்கிறான். அப்போது, ரேவதி மனதிற்குள், உங்களை விட்டு எனக்கு போக மனசு வரவில்லை. அதற்காகத்தான் என் கையை நானே உடைத்துக்கொண்டேன், இனிமேல் நான் உங்களை விட்டு பிரியவே மாட்டேன் என்கிறாள். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தீபாவின் அம்மா மற்றும மைதிலி அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இங்கே இருப்பதால் தீபாவின் நினைவாகவே இருக்கிறது. இதனால், நாம் அனைவரும் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என்று பேசிவிட்டு அனைவரும் சொந்த ஊருக்கு வருகின்றனர். அப்போதுதான் கார்த்திக்கு ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த விஷயம் தெரிய வருகிறது. இதை கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: மறுபக்கம் ரேவதி மருத்துவமனையில் இருக்க அங்கே வரும் மாயா, மகேஷ் இருக்கும் இடத்தை என்னிடம் சொல்லிவிடு என்று கெஞ்சுகிறாள். அப்போது, ரேவதி, உன் முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. தயவு செய்து போ என்று சொல்கிறாள். நான் உன்னை பொய் சொல்லி தான் ஏமாற்றினேன். உன் கணவர் உண்மையில் யார் தெரியுமா... அவன் ராஜசேதுபதியின் பேரன் கார்த்திக், பெரிய பணக்காரன் உன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு டிரைவராக வேலை செய்கிறான் என்ற உண்மைய சொல்லுகிறாள். அப்போது கார்த்திக் அங்கே வர, மாயா, கார்த்திக் உன்ன பாத்து எல்லாத்தையும் சொல்லிட்டேன். நீ சந்தோஷமாவே வாழ முடியாது என்று சொல்கிறாள். அப்போது ரேவதி. என் கணவர் யார் எனக்கு தெரியும் தயவுசெய்து இந்த இடத்தை விட போ என்று சொல்கிறாள்.

இன்றைய எபிசோடு: இதையடுத்து, இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி குடும்பத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் முத்துபாண்டியும் சிவாண்டியும் சேர்ந்து சாமுண்டீஸ்வரியின் மகள் சுவாதியை சந்தித்து ஒரு ஹோட்டலில் மியூசிக் டைரக்டர் இன்டெர்வியூ ஏற்பாடு பண்ணி இருக்காரு, நீ போய் அட்டென்ட் பண்ணி பாரு என்று சொல்கிறாள். இங்கே ஒரு இன்டெர்வியூ நடப்பது போல் செட்டப் செய்து வைக்கின்றனர். ஸ்வாதி வந்ததும் அவளுக்கு ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிடு, நான் அவளை பிராத்தல் கேஸில் சிக்க வைத்து விடுகிறேன் என திட்டம் போடுகிறான்

விஷயம் அறியாத ஸ்வாதி ஹோட்டலுக்கு கிளம்பி வர அவளது தோழி ரேவதிக்கு ஃபோன் செய்து சுவாதி காலேஜ் வரல ஃபோனும் எடுக்கல என்னாச்சு என்று விசாரிக்கிறாள். உடனே ரேவதி கார்த்தியிடம் விஷயத்தை சொல்ல அவனுக்குள் ஏதோ சந்தேகம் உருவாகிறது. நேற்று ஸ்வாதி வைத்திருந்த விசிட்டிங் கார்டில் என்ன அட்ரஸ் இருந்தது என்று விசாரித்து அந்த ஹோட்டலுக்கு கிளம்பி வருகிறான். ஸ்வாதி இந்த ஹோட்டலுக்கு வந்து விசாரித்து ரூமிற்கு வருகிறாள். அவளுக்கு ஜூஸ் கொடுக்க அதை குடித்த ஸ்வாதி மயங்கி விழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X