மகேசை கடத்தியது கார்த்திக் தான்.. காத்திருக்கும் திருப்பம் என்ன? கார்த்திகை தீபம் !

சென்னை: ராஜராஜன் சாமுண்டீஸ்வரியிடம், மாப்பிள்ளை மகேஷ் நல்லவன் இல்ல, அவனை பத்தி எல்லாரும் தப்பா பேசுகிறார்கள். அப்படிப்பட்டவனையா நம்ப பொண்ணுக்கு கட்டி வைக்க போற? என்று கேட்க, சாமுண்டீஸ்வரி அவன் கேடு கெட்டவன் என்பது எனக்கும் தெரியும், அவனுக்கும் அந்த மாயாவிற்கும் தொடர்பு இருக்கு என்பதும் எனக்கு தெரியும், அப்படி தெரிந்தே நம்ம பொண்ணு வாழ்க்கையை நான் கெடுப்பேனா? கண்டிப்பா அவன் கூட இந்த கல்யாணம் நடக்காது, ஆனால், சொன்ன நேரத்தில் நான் பார்த்த மாப்பிள்ளைக்கூட கல்யாணம் நடக்கும். அந்த மாப்பிள்ளை வேற யாரும் இல்லை டிரைவர் ராஜாவை தான், நான் நம்ப வீட்டு மாப்பிள்ளையாக்க போகிறேன் என்கிறாள். அதே நேரம், அய்யர் மாப்பிள்ளையை அழைத்து வர சொல்ல, மாயா அவனை அழைத்து வர போக, அங்கே மகேஷ் இல்லாததைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து இங்கே நடக்கப்போவதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில், மகேஷ் காணவில்லை என்ற விஷயம் தெரிய ரேவதி, மகேஷ் காணாமல் போக டிரைவர் தான் காரணம், அவர் இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்று பார்க்கிறார். அதற்காகத்தான் உங்க கிட்ட மகேஷ் பத்தி தப்பு தப்பா சொன்னார் என்று சொல்கிறாள். இதைக் கேட்டு, சாமுண்டீஸ்வரி, டிரைவர் ராஜா இதை நிச்சயம் செய்து இருக்க மாட்டார். எனக்கு அவனை பத்தி நல்லா தெரியும். டிரைவர் நம்ப குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்று தான் நினைப்பான். இதுக்கு வேறொருத்தர் தான் காரணம் என சிவனாண்டியை பிடித்து கேள்வி கேட்கிறாள். ஆனால் அவன் எனக்கு எதுவும் தெரியாது என சொல்கிறான்.

zee tamil Karthigai Deepam

காலில் விழுந்த பாட்டி : மறுபக்கம் ராஜராஜன், அம்மா நான் சாமுண்டீஸ்வரி கிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்தேன். அவ கேட்குற மாதிரி தெரியல என்று சொல்கிறான். இதைகேட்ட பரமேஸ்வரி பாட்டி, நான் பேசுகிறேன் என்று, சாமுண்டீஸ்வரியிடம் வந்து, அன்னைக்கு நாங்க பண்ணது தப்புத்தான் எங்களை மன்னித்துவிடு, என் பேரனுக்கு ரேவதியை கல்யாணம் பண்ணி கொடு, நான் உன் காலில் விழுந்து பண்ணிப்பு கேட்கிறேன் என்று சொல்லி பாட்டி, சாமுண்டீஸ்வரி காலில் விழப்போக அனைவரும் தடுக்கின்றனர். அப்போதும் மனம் இறங்காத, சாமுண்டீஸ்வரி என்ன, கல்யாணத்தில் வந்து நாடகமாடுறீங்களா.. ஓரமா போய் கல்யாணத்தை பாருங்க என்று சொல்ல, பாட்டி கண்கலங்கியபடி நிற்கிறாள்.

zee tamil Karthigai Deepam

அடுத்ததாக மகேஷ் குடோனில் அடைத்து வைக்கப்பட்டு இருக்க, ரவுடிகள் சாமுண்டீஸ்வரிக்கு போன் செய்து மேடம் நீங்க சொன்ன மாதிரியே அவனை கடத்திட்டோம் என்று சொல்கின்றனர்.இங்கே மாயா மகேஷை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கலாம் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X