ரேவதி கழுத்தில் தாலி கட்டிய கார்த்திக்.. பழிக்கு பழி வாங்க துடிக்கும் மாயா.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம்.சீரியல் சண்டே ஸ்பெஷல் எபிசோடில், மகேசை ரௌடிகளை வைத்து சாண்முடீஸ்வரியை கடத்திவைத்து, மாப்பிள்ளை வரமாட்டான். ஆனால், கல்யாணம் நிற்கக்கூடாது என்று, ரேவதியிடம் டிரைவர் ராஜாவைத்தான் நீ திருமணம் செய்து கொள்ளும்படி சொல்ல, அவள் முடியாது என்று சொல்கிறாள். இதனால், சாமுண்டீஸ்வரி, துப்பாக்கியை காட்டி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்ட ரேவதி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

கார்த்திக் முதலில் முடியாது என்று சொல்ல, ராஜராஜன் காலில் விழுந்து கெஞ்சியதால், கார்த்திக்கும் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்கிறான். பின் கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் மேடை ஏறுகின்றனர். ஆனால், இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என மாயா, சிவனாண்டி, சந்திரகலா ஆகியோர் திட்டம் போட்டு, ஆசிரமத்தில் வளரும் ரேவதியின் குழந்தை தீபா மற்றும் கார்த்திக் அம்மா அபிராமியை கடத்திவிடுகின்றனர். இந்த விஷயம் மணமேடையில் இருக்கும் கார்த்திக்கு தெரிய வருகிறது. ரவுடிகளிடம் சிக்கிய அம்மா அபிராமி மற்றும் ரேவதியின் குழந்தை என இருவரையும் சண்டை போட்டு காப்பாற்றுகிறான்.

zee tamil Karthigai Deepam

குழந்தை யாருடையது: மண்டபத்திற்கு வரும் குழந்தை தீபா,ரேவதியை அம்மா என்று கூப்பிட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின் சிவனான்டி ரேவதியை தவறாக பேசுகிறான். அவன் மட்டுமில்லாமல் அனைவரும் ரேவதியை தவறாக பேச, சாமுண்டீஸ்வரி யார் இந்த குழந்தை உன்னை ஏன் அம்மா என்று கூப்பிடுகிறது என்று கேட்கிறாள். அப்போது ரேவதி, அது என்னுடைய தோழியின் மகள், அவள் இறந்துவிட்டதால், ஆசிரமத்தில் வைத்து நான் வளர்ந்து வருகிறேன் என்று சொல்கிறாள். அதன் பின் கார்த்திக், ரேவதி கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடங்குகிறது.

zee tamil Karthigai Deepam

விருமனின் திட்டம்: ராஜசேதுபதியின் ஊரில் இருக்கும் விருமனுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. உடனே அவன், இந்த கல்யாணம் மட்டும் நடந்து விட்டால், இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்து விடுமே என நினைக்கிறான். இதனால், நான் ஊருக்கு போய் சாமுண்டீவரியிடம் உண்மையை சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த போகிறேன் என்று கிளம்பி வருகிறான். கல்யாணத்தை நிறுத்த விருமன் மண்டபத்திற்கு வரும் தகவல் ராஜராஜனுக்கு தெரியவர, அவன் மயில்வாகனத்தை அனுப்பி, விருமன் மண்டபத்திற்குள் வரக்கூடாது என்று சொல்கிறான். இதனால் மயில்வாகனம் விருமனை கட்டையால் அடித்து மயங்க வைத்து ஓரு அறையில் அடைத்து வைத்து விடுகிறான்.

zee tamil Karthigai Deepam

தாலி கட்டிய கார்த்திக்: மணமேடையில் ரேவதியும் கார்த்தியும் இருக்க, இருவரையும் பார்த்து சாமுண்டீஸ்வரி சந்தோஷம் அடைகிறாள். மேலும் பரமேஸ்வரி பாட்டியை பார்த்தவாறு, எப்படியாவது உன் பேரனுக்கு என் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைச்சியே பாத்தியா, நான் நினைச்சபடி தான் என் மகளுக்கு திருமணம் நடக்கப்போகிறுது என மனதிற்குள் பேசி மகிழ்ச்சி அடைகிறாள். அதேபோல பரமேஸ்வரி, கார்த்திக்கு திருமணம் நடக்கப்போவதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார்.

மறுபக்கம், தீபாவிற்கு எப்போதும் துணையாக இருந்த, பெண் சாமியார் தியானத்தில் இருக்கும் போது, ரேவதிக்கும் கார்த்திக்கும் திருமணம் நடக்கப்போவது தெரிகிறது. இத்தனை நாட்களாக பகையாக இருந்த சொந்தம் இப்போது ஒன்றாக சேர போகிறது நல்லபடியாக கார்த்திக்கு திருமணம் நடக்கப்போகிறது. இந்த திருமணத்திற்கு சென்று நான் கார்த்திகை வாழ்த்த வேண்டும் என பெண் சாமியார் திருமண மண்டபத்திற்கு வருகிறார்.

zee tamil Karthigai Deepam

கண்கலங்கிய ரேவதி: அப்போது திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்க ரேவதி கண் கலங்கியபடி அமர்ந்திருக்கிறாள். இதைப்பார்த்த கார்த்திக், ரேவதி உனக்கு என்ன பிடிக்கவில்லை என்று எனக்கு நல்லாவே தெரியும். வேற வழியே இல்லாம தான், நீ என்னை கல்யாணம் பண்ண முடிவு செய்தே. நான் உன்னை சொத்துக்காக, பணத்திற்காக நிச்சயமா கல்யாணம் பண்ணிக்கவில்லை. இந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். இத நான் இப்ப சொன்னாலும் புரிஞ்சிக்கிற நிலையில நீ இல்ல, அதுக்கான நேரம் வரும் என்று தன்னைத்தானே சமாதானம் படுத்திக் கொள்கிறான்.

மாயாவின் கோவம்: இப்படி கார்த்திக் மனதில் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்க கார்த்தி, ரேவதியின் கழுத்தில் தாலி கட்டுகிறான். இதைபார்த்த அனைவரும், மகிழ்ச்சி அடைய, மாயா சிவனாண்டி, சந்திரக்கலா கோவத்தோடு அர்ச்சனையை தூக்கி எறிகின்றனர். ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த சொத்தை அடைய வேண்டுமென்று நானும் மகேஷூம் எப்படி எல்லாம் திட்டம் போட்டோம். கடைசியில் எல்லாம் இந்த கார்த்திக்கால் நாசமாப்போச்சு, மொத்த சொத்தையும் அவனே அமுக்கிக்கிட்டான். கார்த்திக், நீ என்னதான் ரேவதியை கல்யாணம் பண்ணி இருந்தாலும், உங்க ரெண்டு பேரையும் நான் நிச்சயமா சந்தோஷமாவே வாழ விடமாட்டேன். உன் பின்னாடியே வந்து ரேவதி கிட்ட உன்ன பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லி, உங்க ரெண்டு பேரையும் நான் சீக்கிரமா பிரிப்பேன் என்று மாயா திருமண மண்டபத்திலேயே சபதம் எடுக்கிறாள்.

நேரலில் வந்த சாமியார்: அந்த நேரம் பார்த்து மண்டபத்திற்குள் பெண் சாமியார் வர, கார்த்திக் அந்த பெண் சாமியாரை பார்த்து, இவங்க தீபாவிற்கு தெரிந்த சாமியார், இவங்க எப்படி இங்கே வந்தார்கள் என்று ஆச்சரியமாக பார்க்கிறான். அப்போது அந்தப் பெண் சாமியார், என்ன கார்த்தி கல்யாணத்துக்கு எப்படி வந்தேன் என யோசிகிறியா? எனக்கு எல்லா விஷயங்களும் நல்லாவே தெரியும் என்று சொல்லி விட்டு கார்த்திக் மற்றும் ரேவதியை ஆசிர்வாதம் செய்கிறார். ரேவதி உன்னோட மனசு இப்ப பெரிய குழப்பத்தில் இருக்கு நாளடைவில் அந்த குழப்பத்துக்கான விடை உனக்கே தெரியும். கார்த்திக் ஒரு நல்ல பையன், அவன் கிடைக்க நீதான் கொடுத்து வச்சிருக்கணும் என்று சாமியார் சொல்கிறார்.

zee tamil Karthigai Deepam

இனிமேல் தான் பிரச்சனை: அப்போது, ரேவதி நல்லவன்னு சொல்றதுக்காகவே சாமியாருக்கு காசு கொடுத்து கூட்டிட்டு வந்து இருக்கியா... நீ எவ்வளவு பெரிய மோசமானவனு எனக்குத் தான் தெரியும். நல்லவன் நல்லவன் என்று எல்லாரையும் நம்ப வச்சு கடைசில, என் கழுத்துலையே நீ தாலி கட்டிட்ட, தாலிகட்டிட்டா மட்டும் என்கூட நீ சந்தோஷமா வாழலாம்னு நினைக்காதே, சத்தியமா என் கூட நீ நல்லாவே வாழ முடியாது. உன்ன நான் எவ்வளவு கொடுமை படுத்தனுமோ அவ்வளவு கொடுமைப்படுத்துவேன் என்று ரேவதி தன்னுடைய மனதுக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது சாமியார், இருவருக்கும் ஒரு தாயத்தை கொடுத்து இதை கையில் கட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இனிமேல் தான் பல வகையில் பிரச்சனை வரும், அதில் இருந்து காப்பாற்ற இந்த தாயத்து உதவும் என்கிறார். எடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X