கடத்தப்படும் ரேவதி.. கார்த்திக்கை சிக்க வைக்க நடக்கும் மாஸ்டர் பிளான்.. கார்த்திகை தீபம்!

சென்னை: நவீன் துர்காவை கலாய்த்தபடி இருக்க இதை சந்திரகலா கவனிக்கிறாள். இவனை ஏதாவது செய்யணும் என யோசிக்கிறாள். அந்த சமயத்தில் நவீன் தனது ஃபோனை வைத்து விட்டு சென்றுவிட, ஃபோனை எடுத்த சந்திரகலா, அவனது அப்பாவிற்கு ஃபோன் செய்து நீங்க யார்? என்ன பண்றீங்க என்று விசாரிக்க அவர் நாங்க பெரிய பணக்கார குடும்பம், பிசினஸ் பண்றோம் என்ற உண்மைகளை உடைக்கிறார். இதை கேட்ட சந்திரகலா, உங்க மகன் நவீன் கார் டிரைவராக இங்கே வேலை செய்கிறான் என்கிற விஷயத்தை சொல்கிறாள்.

நவீனின் அம்மா, அப்பா வந்து நவீனின் கோலத்தை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். மேலும், கோடி கோடியாக சொத்து இருக்கும் போது உனக்கு எதற்கு இந்த வேலை என்று கேட்க, நவீன், துர்காவை பிடித்திருப்பதாகவும், அவளை காதலிப்பதாகவும் சொல்ல சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். நீ ஏமாத்தி இந்த வீட்டிற்குள் வந்திருக்க, நீ உண்மையை சொல்லி பொண்ணு கேட்டு இருந்தா கூட கொடுத்திருப்பேன், பொய் சொல்லி உள்ள வந்த உனக்கு என் பொண்ணை தர மாட்டேன் என்று நவீனை வெளியே துரத்துகிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சந்திரகலா கார்த்திக்கிடம் வந்து, என்ன டிரைவர், நீ பொய்சொல்லி கூட்டிக்கிட்டு வந்த நவீனோட நிலைமை என்ன ஆச்சு பார்த்தியா... அவனுக்கே இந்த நிலைமை என்றால் , நீ சாமுண்டீஸ்வரியை ஏமாத்தி, அவ பொண்னை கல்யாணம் பண்ணி இருக்க, அவளுக்கு மட்டும் உண்மை தெரிந்தால் உன் நிலைமை அவ்வளவு தான். இந்த விஷயத்தை இந்த திருவிழா நடப்பதற்குள் நான் சாமுண்டீஸ்வரி கிட்ட சொல்லி, இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புறேன் பார் என்று சொல்ல, கார்த்திக் முடிஞ்சா பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

zee tamil Karthigai Deepam

துர்காவிற்கு நவீன் மீது காதல்: மறுபக்கம், நவீன் தனது அப்பா அம்மாவிடம், நான் துர்காவை காதலிக்கிறேன். உன்மையில் அந்த குடும்பமே நல்ல குடும்பம், இந்த குடும்பத்திற்கு என்று ஒரு மரியாதை இருக்கு. இந்த காலத்துல இருக்கும் பெண்கள் அம்மா பேச்சை கேட்க மாட்டாங்க. ஆனால், சாமுண்டீஸ்வரி வீட்டு பெண்கள் அம்மா கிழிச்சா கோட்டைக்கூட தாண்ட மட்டாங்க இப்படி பெண், நம்ம வீட்டுக்கு மருமகளா வர நாம தான் கொடுத்துவைத்து இருக்க வேண்டும் என்று சொல்ல, நவீனின் பெற்றோரும், சரி உன் விருப்பப்படி செய் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகின்றனர். இதையடுத்து, நவீன் கார்த்திக்கை சந்தித்து நான் துர்காவை காதலிக்கிறேன், இந்த ஊரை விட்டு போனால் அவளோட தான் போவேன் என்று சொல்கிறான். இதையடுத்து கார்த்திக்கும் மயில்வாகனமும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது துர்கா நவீன் வாங்கி கொடுத்த கொலுசை அணிந்திருப்பதை கவனிக்கின்றனர், இதனால் துர்கா மனதுக்குள் நவீன் மீது காதல் உள்ளது என்பதை புரிந்து கொள்கின்றனர்.

கடத்தப்படும் ரேவதி: பிறகு கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் டிராவல் ஏஜென்சிக்கு வருகின்றனர், ரேவதி ஆஸ்திரேலியா செல்லவிருந்த விமானத்தில் மாற்றம் இருப்பதாக சொல்கின்றனர், அதாவது காலை 6 மணிக்கு பதிலாக 10 மணிக்கு பிளைட் என சொல்லி அனுப்புகின்றனர். தூரத்தில் இருந்து இவர்களை கவனித்த மாயா ஏஜென்சியிடம் விசாரிக்க ரேவதி ஆஸ்திரேலியா செல்வது தெரிய வருகிறது. இதனால் மாயா ரேவதிக்கு போன் செய்து சந்தித்து பேச வேண்டும் என்று சொல்கிறாள். பிறகு சந்திரகலாவும் சிவனாண்டியும் சந்தித்து பேச கார்த்திக்கை சிக்க வைக்க ராஜசேதுபதி வீட்டில் ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்து குடும்ப போட்டோவை திருட திட்டமிடுகின்றனர். அடுத்து ரேவதி கார்த்திக்கிடம் சொல்லாமல் மாயாவை சந்திக்க வர மாயாவின் ஆட்கள் ரேவதியை கடத்துகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X