தண்ணீர் தொட்டிக்குள் உயிருக்கு போராடும் ரேவதி.. காப்பாற்ற போராடும் கார்த்திக்..கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் டிராவல் ஏஜென்சிக்கு வந்து, ஆஸ்திரேலியே செல்லவிருந்த விமானத்தில் மாற்றம் இருப்பதாக சொல்கின்றனர், அதாவது காலை 6 மணிக்கு பதிலாக 10 மணிக்கு பிளைட் என இருப்பதாக சொல்கின்றனர். இதை தூரத்தில் கவனித்த, மாயா, அவர்கள் வெளியில் சென்றதும், ஏஜென்சிக்கு சென்று ரேவதி பற்றி விசாரிக்கிறாள். அப்போது, ரேவதி ஆஸ்திரேலியா செல்வது தெரிய வருகிறது. அவள் மட்டும் வெளிநாடு சென்றுவிட்டாள், மகேசை கண்டே பிடிக்க முடியாது என முடிவு செய்த மாயா ஒரு திட்டத்தை போடுகிறாள். இதையடுத்து, மாயா ரேவதிக்கு 1போன் செய்து உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என்கிறாள். இதையடுத்து ரேவதி, கார்த்தியிடம் சொல்லாமல் மாயாவை சந்திக்க செல்கிறாள். அப்போது மாயாவின் ஆட்கள் ரேவதியை கடத்துகின்றனர். இதையடுத்து, இன்று என்ன ஆனது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், மாயா ரேவதியை ஒரு தண்ணீர் தொட்டிக்குள் அடைத்து வைத்து காரத்திக்கு ஃபோன் செய்கிறாள். ரேவதியை நான் தான் கடத்தி வைத்திருக்கேன், எனக்கு என் மகேஷ் வேணும் இல்லனா ரேவதியை உசுரோட பார்க்க முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். மேலும் ரேவதி தண்ணீர் தொட்டிக்குள் அடைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கும் வீடியோவையும் அனுப்ப கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். மாயா, கார்த்திக்கிடம் ஃபோனில் பேசுவதை, தண்ணீர் தொட்டிக்குள் இருக்கும் ரேவதி கேட்கிறாள். கார்த்திக் எத்தனையோ முறை, மாயா நல்லவள் இல்லை என்று சொன்னார். நான் தான் நம்பவே இல்லை. கடைசியில் மாயா, இப்படி மோசமானவளா இருக்காளே என்று நினைத்து வருத்தப்படுகிறாள்.

கார்த்திக் தீபம் சீரியல்: இன்னொரு பக்கம், சிவனாண்டி ஏற்பாடு செய்த வேலைக்கார பெண், ராஜசேதுபதியின் வீட்டில் இருந்த குடும்ப போட்டோவை எடுத்து வந்து சிவனாண்டியிடம் கொடுக்கிறாள். இதைப்பார்த்த சிவனாண்டி. அந்த டிரைவரின் வேஷத்தை கிழிக்க இது தான் சரியான நேரம் என்று, சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வரும் சிவனாண்டி கார்த்திக் யார் தெரியுமா? ராஜசேதுபதியின் பேரன் தான் என்று குடும்ப போட்டோவை ஆதாரமாக காட்டுகிறான்.
தண்ணீர் தொட்டியில் ரேவதி: மறுபக்கம், தண்ணீர் தொட்டியில் தண்ணீர் வந்து கொண்டே இருக்க ரேவதி, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறான். மறுபக்கம், கார்த்திக், தனது போலீஸ் நண்பனின் உதவியுடன் ரேவதி அடைக்கப்பட்டு வைத்திருக்கும் ஏரியாவை கண்டு பிடித்து விடுகிறான். மேலும், கரண்ட் இருந்தால் தானே தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஏறும் என, அந்த ஏரியாவில் இருக்கும் மின்வாரியத்திடம் பேசி கரண்ட் ஆப் செய்து விடுகிறான். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட மாயா, இதெல்லாம் உன்னுடைய வேலை? கரண்ட இல்லை என்றால் என்ன என்று, ஜெனெரேட்டரை மாயா வாடகைக்கு எடுக்கிறாள்.
மூன்று ஜெனெரேட்டர்களை மாயா வாடகைக்கு எடுத்த விஷயம் கார்த்திக்கிற்கு தெரியவர, ரேவதியை காப்பாற்ற வேறு வழியில்லாத நிலையில் ஹாஸ்பிடலுக்கு வந்து மகேஷை வீடியோ எடுத்து அதை மாயாவுக்கு அனுப்பி வைக்கிறான். அந்த வீடியோவில் சுயநினைவு இல்லாமல் இருக்கும் மகேசை பார்ப்பதற்கு மாயா ஹாஸ்பிடல் கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திக் ரேவதியை மீட்கப்போவது எப்படி என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











