பாதியில் நின்ற பூஜை.. கும்பாபிஷேகம் நடக்குமா? கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: கோவிலில் பூஜை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க, விருமன் ஏற்பாடு செய்த அவனது சகலை இன்ஸ்பெக்டர், ராஜராஜனிடம் உன் பொண்டாட்டி நல்லா அழகா இருக்கிறதுனால தான் உன் அம்மா அப்பாவை விட்டு ஓடிட்டியா? என்று வம்புக்கு இழுக்கிறான். மேலும், பொண்டாட்டி மட்டும் இல்ல, உன் பொண்ணுங்களும் நல்லா அம்சமாகத்தான் இருங்காங்க என்று பேச, ராஜராஜன் கோபப்பட்டு, என் கிட்டையே பெண்ணுங்கள பத்தி தப்பா பேசுறியா... இவ்வளவு நேரம் உன்னை விட்டு வெச்சதே ரொம்ப தப்பு என்று, இன்ஸ்பெக்டரின் சட்டையை பிடித்து அடிக்கிறான்.
பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்த இன்ஸ்பெக்டர் என்னையே அடிக்க வருவியா? உன்ன சும்மா விட மாட்டேன் என்று, ராஜராஜனின் சட்டையை பிடித்து இழுத்து கைது செய்ய முயற்சி செய்கிறான். அப்போது, ராஜராஜன் மரியாதையா சட்டையில் இருந்து கையை எடு, தப்பு பண்ணது நீ என்று சொல்ல, அதை கேட்காத அந்த இன்ஸ்பெக்டர், ராஜராஜனை இழுத்து சென்று ஜீப்பில் ஏற்றி, அவர் மீது வழக்கும் போட்டு சிறையில் அடைக்கிறான்.
கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் தொடங்கி நடக்கிறது. அப்போது பூஜையில் ராஜராஜன் சில சடங்குகளை செய்ய வேண்டும் என அவரை அழைக்கின்றனர். ஆனால், அந்த இடத்தில் ராஜராஜன் இல்லை, கார்த்திக் அவரை பல இடத்தில் தேடி அலைகிறான். அப்போது, ஒருவரிடம் விசாரிக்க, ராஜராஜன் இன்ஸ்பெக்டர் துரையிடம் பேசிக்கொண்டு இருந்ததாகவும் அவர் தான் ஜீப்பில், அவரை அழைத்து சென்றதாகவும் தெரிய வருகிறது. இதனால், கார்த்திக்கிற்கு என்னமோ பிரச்சனை நடந்திருக்கு என்று சந்தேகம் வருகிறது.

பிரச்சனை செய்த விருமன்: அப்போது பூஜையை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த, விருமன், உங்க மகன், ராஜராஜன் வந்து தான், கும்பாபிஷேகம் நடந்த வேண்டும் என்று சொல்லி இருந்தோம். அப்போது சத்தியம் எல்லாம் பண்ணீங்க இப்போ, பையனை காணும் என்று சொல்லுறீங்க, காணாமல் போவதற்கு அவர் என்ன குழந்தையா. இந்த பூஜையைல் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் தான் அவர் எங்கையாவது போய் இருப்பார், இதனால், கும்பாபிஷேகம் இனிமே நடக்காது, எல்லாத்தையும் அப்படியே நிறுத்துங்க என்று சொல்லிக்கொண்டு இருக்க, பரமேஸ்வரி பாட்டி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள்.
என் மருமகன் செய்யணும்: அந்த நேரம் பார்த்து, சாமியார் ஒருவர் வர, அவரிடம் அருள்வாக்கு கேட்கின்றனர். அவர் ராஜராஜனுக்கு பதிலாக அவரின் ரத்த வாரிசு இருந்தால் அவர்களே இந்த பூஜையை செய்யலாம் என்று சொல்கிறார். இதைக்கேட்ட ஊர் மக்கள் அனைவரும் அப்படியே செய்து விடுகிறோம். அவரின் ரத்த வாரிசு பேரன் கார்த்திக் பூஜை செய்யட்டும் என்று சொல்ல, பரமேஸ்வரி பாட்டியும், அப்படியே செய்துவிடலாம் என்று சொல்கிறாள். இதை கேட்டுக்கொண்டிருந்த சாமுண்டீஸ்வரி, இதற்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன், இந்த பூஜையை என் கணவர் செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால், என் மருமகன் ராஜா செய்ய வேண்டும் என்று சொல்லி சண்டை போடுகிறாள்.
இதைக்கேட்ட, பரமேஸ்வரி பாட்டி, எப்போ என் பேத்தி ரேவதியை டிரைவர் திருமணம் செய்து கொண்டாளோ, அப்போதில் இருந்து அவனும் என் பேரன் தான், உன் விருப்பப்படி அவனே செய்யட்டும் இதை நான் தடுக்க மாட்டேன், நல்லபடிய இந்த யாகம் நடந்த போதும், என்று சொல்கிறாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, விருமன், ராஜராஜனின் பேரன் கார்த்திக் தான், சாமுண்டீஸ்வரியின் மருமகனும் கார்த்திக் அப்படி இருக்கும் போது, இந்த சாமுண்டீஸ்வரி ஏன், என் மருமகன் தான் செய்ய வேண்டும் என்று பேசுகிறார். அப்படி என்றால், இதில், ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு. கார்த்திக் தான் பரமேஸ்வரியின் பேரன் என்பதை சொல்ல வருகிறான். இதை தெரிந்து கொண்ட பாட்டி, விரும்பனை சொல்ல விடாமல் நடுக்கிறாள்.
கடுப்பான ஊர் மக்கள்: என்ன விரும்ப, இந்த கோவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பது என் கணவரோட ஆசை, இதற்காக என் பேரன் படாத கஷ்டத்தை எல்லாம் பட்டு இருக்கான். இப்போ, பிரச்சனை முடிந்து நேரம் கூடி வந்து, பூஜை நடக்கும் போது நீ பிரச்சனை செய்தா என்ன, ஆர்த்தம். இத்தனை நாள், இந்த கோவில் கும்பாபிஷேகம் நடக்கக்கூடாது என்று தான் நீ திட்டம் போட்டு இருந்தியா என்று கேட்கிறாள். உட்னே ஊர் மக்கள் அனைவரும் கூடி, விருமன், இத்னை வருஷமா கோவில் கும்பாபிஷேகம் நடக்காமல் இருந்தது. இப்போது தான் அதற்கு ஒரு நல்ல காலம் பொறந்து இருக்கு, அதை நீ கெடுக்க பாக்குறியா... இத்தனை நாள் கும்பாபிஷேகம் நடக்காததற்கு நீ தான் காரணமா என்று சொல்லி அனைவரும் அவனை கேள்வி கேட்கின்றனர்.
இதனால், கடுப்பான விருமன், நான் மருமகன் பூஜை செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல, கடுப்பான சாமுண்டீஸ்வரி, துப்பாக்கியை எடுத்து, என்ன சும்மா கத்திக்கிட்டு இருக்க, நான் யார் தெரியுமா... உன்ன மாதிரி சும்மா பேசிக்கிட்டு இருக்க மாட்டேன், சுட்டுத்தள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன். ஒழுங்க இந்த இடத்தில் இருந்து போய்டு, இல்லனா அவ்வளவு தான். இப்போ இந்த இடத்தில் என் புருஷன் இல்ல, அவர் இங்கே இல்லாதற்கும் நீ தான் காரணம் என்று தெரிந்தால் உன்னை சும்மா விட மாட்டேன் என்று சொல்லி மிரட்ட, பயந்து போன விருமன் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இடத்தில் இருந்து கிளம்பு செலகிறான்.
சிறையில் இருக்கும் ராஜராஜன், கும்பாபிஷேம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்பது என் 25 வருஷ கனவு, அது அப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறான். மறுபக்கம், கோயிலில், சாமுண்டீஸ்வரியை கார்த்திக்கின் கையை பிடித்து அழைத்து வந்து பூஜையில் உங்கார வைக்கிறார். இதைப்பார்த்த பரமேஸ்வரி பாட்டி, இந்த காட்சியைத் தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அது நடந்துவிட்டது என்று, அப்பன் முருகனுக்கு நன்றி சொல்கிறாள். பிறகு கார்த்திக்கை பூஜையில் உங்கார வைக்க போகும் சமயத்தில் ராஜராஜனை அழைத்து வந்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











