TamilbredcrumbMoviesbredcrumb100bredcrumbCritics Review

    விமர்சகர்கள் கருத்து

    • படத்தில் காட்டப்படும் குற்ற செயல்கள் பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. அதேபோல் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றியும் படத்தில் பேசியுள்ளார் இயக்குனர்.

      தொடர்ந்து பெர்பாமன்ஸ் படங்களில் நடித்து வந்த அதர்வாவுக்கு ஒரு பக்கா கமர்ஷியல் படமாக அமைந்திருக்கிறது 100. ஒரு துடுப்பான போலீஸ் அதிகாரிக்கான பிட்டான உடல்மொழியுடன் அசத்துகிறார். பாசம், காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் கலவையாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

      படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் தயாரிப்பாளர் மகேஷ், சோகமே உருவாய் தெரிகிறார். அந்த கதாபாத்திரத்தின் மீது இயல்பாகவே பரிதாபம் ஏற்பட்டுவிடுகிறது. வில்லனாக நடித்துள்ள ராகுல், பிஸ்டல் பெருமாளாக வரும் ராதாரவி, மைம் கோபி,மறைந்த நடிகர் சீனு மோகன், மைம் கோபி என அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.