twitter
    Tamil»Movies»24»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • டைம் மெஷின்... சினிமா உலகில் எவர்கிரீன் களமிது. ஹாலிவுட்டில் அடிக்கடி இந்தக் களத்தில் படங்கள் வரும். தமிழில் அரிதாக எப்போதாக ஒன்றிரண்டு.

      வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட ஈடுபாடு இருந்தால் மட்டும்தான் '24' மாதிரி கதைகளைப் படங்களாக்க முடியும். அந்த வகையில் ஹீரோ சூர்யாவைவிட தயாரிப்பாளர் சூர்யா பாராட்டுக்குரியவர்.

      படத்தின் விமர்சனத்துக்குப் போகும் முன்... குழந்தைகளுக்கான சேனல்களில் டோரிமான் என்று ஒரு தொடர் கார்ட்டூன் சீரியல் ஒளிபரப்பாவதைப் பார்த்திருக்கிறீர்களா... அதை நினைவூட்டிக் கொண்டால் இந்தக் கதையோடு எளிதில் உங்களால் ஒன்ற முடியும்!

      நேரத்தை உறைய வைத்து மழையை அந்தரத்தில் நிறுத்துவது, கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள் புகுந்து மேட்ச் முடிவை மாற்றுவது, காதலியைக் குழப்புவது... என சுவாரஸ்யக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.

      படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சூர்யாவின் அபார உழைப்பு. அதுவும் அந்த வில்லன் சூர்யா.. இதுவரை வந்த சூர்யா பாத்திரங்களிலேயே அல்டிமேட். வில்லத்தனத்தின் கொடூரத்தை அப்படிக் காட்டியிருக்கிறார். ஆனால் ஏன் இத்தனை விரோதம்?

      விஞ்ஞானி சூர்யா அந்த கடைசி காட்சியில் துப்பாக்கியின் இலக்கைத் திருப்பி வைப்பதில் ஸ்கோர் செய்கிறார்.

      அம்மாவாக வரும் சரண்யா, இளம் சூர்யா தான் யாரென்பதை கண்டு கொள்ளும் காட்சியில் அழ வைக்கிறார்.

      ஆனால் இந்த கோடையில் குழந்தைகளோடு தைரியமாகப் பார்க்கப் போகலாம் என்பது ஒரு ஆறுதல்.