விமர்சகர்கள் கருத்து

    • ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும், சினிமா வியாபாரத்தைத் தாண்டி இந்த சமூகத்துக்கு ஏதாவது நல்ல விஷயங்களைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு படத்தைத் தந்த தயாரிப்பாளர் சூர்யாவுக்கும், இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸூக்கும் முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுவோம்.

      கணவன், குழந்தை, குடும்பத்துக்காக தன் சுயத்தை இழந்து நான்கு சுவர்களுக்குள் முடங்கி, அதே கணவன், குழந்தையால் ஒதுக்கப்படும் ஒரு பெண், மீண்டும் எப்படி தன்னைத் தேடி.. ஒரு பெரிய கவுரவத்தைப் பெறுகிறாள் என்பதுதான் 36 வயதினிலே படத்தின் கதை.

      இடைவேளைக்குப் பிந்தைய சில காட்சிகளில் பிரச்சார நெடி தெரிந்தாலும், இருந்துவிட்டுப் போகட்டுமே.