twitter
    Tamil»Movies»60 Vayadhu Maaniram»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கன்னட படம் ஒன்றில் ரீமேக் தான் இந்த 60 வயது மாநிறம் திரைப்படம். இதுவரை ரீமேக் படங்களை தவிர்த்து வந்த இயக்குநர் ராதாமோகன், ஏன் தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்பது படத்தை பார்க்கும் போது புரிகிறது.

      மொழி, அபியும் நானும், பயணம் என வெற்றிப் படங்களை தந்த பிரகாஷ்ராஜ் - ராதாமோகன் கூட்டணியின் அடுத்த வித்தியாசமான படைப்பு தான் இந்த 60 வயது மாநிறம். தலைமுறை காரணமாக தந்தை மகன் உறவில் ஏற்படும் விரசலையும், தந்தை எனும் உறவின் மகத்துவத்தையும் மிக அழகாக தந்தமைக்காக இயக்குனர் ராதாமோகனுக்கு பாராட்டுக்கள்.

      தந்தை - மகன் உறவு, மனிதம், காதல், காமெடி, பாசம் என பல விஷயங்களையும் சுவாரஸ்யமான திரைக்கதையால் இணைத்து விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர். சோகத்தையும் மென்புன்னகையுடன் சொல்லும் வித்தை ராதாமோகனுக்க கைவந்தக்கலை.

      அட்வைஸ் செய்யாமல், உரக்கப் பேசாமல் அண்டர்ப்பிளே ஆக்டிங்கில் சமுத்திரக்கனி. பார்வையிலேயே ஸ்கோர் செய்கிறார். அந்த பாத்திரம் அப்படி தான் நடந்துகொள்ளும் என நம்மாளும் உணர முடிகிறது.

      ராதாமோகன் படம் என்றதுமே குமரவேலுக்கு டபுள் எனர்ஜி வந்துவிடும் போல. தனக்கே உரித்தான கவுண்டர் காமெடியில் கலக்கியிருக்கிறார். காசி, மதுமிதா, குமரவேல் காம்போ காட்சிகள் அனைத்துமே தியேட்டரில் அன்லிமிட்டெட் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.

      படத்தில் நிறைய இடங்களில் அயர்வு ஏற்படுகிறது. அதற்கு காரணம் படத்தின் நீளம். இன்னும் கூட கொஞ்சம் குறைத்திருக்கலாம். அதேபோல கிளைமாக்ஸ் காட்சியும் நீண்டுகொண்டே செல்லும், முடிவில் 'அப்பாடா' ஃபீலிங்கை தருகிறது.