TamilbredcrumbMoviesbredcrumb7-SevenbredcrumbCritics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ராம், துருவங்கள் பதினாரு படத்திற்கு பிறகு, போலீஸ் அதிகாரி என்றாலே ரகுமான் தான் இயக்குனர்களின் நினைவுக்கு வருகிறார் போல. இதிலும் அப்படிப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டர் தான். வழக்கம் போல் சிறப்பாக செய்திருக்கிறார்.

      நந்திதா ஸ்வேதா, அனிஷா ஆம்ரோஸ், அதிதி ஆர்யா, த்ரிதா சௌத்ரி, புஜிதா பொன்னடா என படம் நெடுக பல அழகு தேவதைகள் வலம் வருகிறார்கள். இதில் நந்திதாவும், அனிஷாவும் தான் கவனம் ஈர்க்கிறார்கள். குறிப்பாக அனிஷாவின் நடிப்பு அபாரம்.

      இவர்கள் அனைவரையும் விட, அதிகமாக நம்மை கவர்வது சரஸ்வதி பாட்டி தான். தனது வில்லத்தனத்தால் அன்லிமிடெட் லைக்ஸ் அள்ளுகிறார்கள். ஆனால் அவரது கதாபாத்திரத்தை நினைத்து, ஆத்திரப்படுவதா, சிரிப்பதா இல்லை இரக்கப்படுவதாக என்பதே தெரியவில்லை. எப்படி இருந்தாலும் பாட்டி தான் படத்தின் பியூட்டி.

      சைதன் பரத்வாஜ்ஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படியாகவே இருக்கின்றன. பின்னணி இசையும் படத்தின் திரில்லிங் பீலிங்குக்கு உதவுகிறது. இயக்குனர் நிசார் ஷபி தான் படத்தின் ஒளிப்பதிவையும் செய்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருக்கிறார். எடிட்டிங்கும் சுவாரஸ்யமாகவே உள்ளது.