twitter
    Tamil»Movies»90 ML»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • படத்தில் பூதக்கண்ணாடி வைத்து தேடினால்கூட கதை என்ற ஒன்று எங்கேயும் கிடைக்கவில்லை. 'என் வாழ்க்கை, என் இஷ்டம்' என்ற கேரக்டர் ஓவியா. அன்சன் பாலுடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்துகிறார். இருவரும் ஒன்றாக தம்மடித்து, தண்ணியடித்து, செக்ஸ் வைத்துக்கொண்ட நேரம் போக, கொஞ்சம் வேலைக்கும் போகிறார்கள். இப்படிப்பட்ட இந்த ஜோடி, ஒரு அப்பார்ட்மெண்டுக்கு குடியேறுகிறது. அங்கு ஏற்கனவே குடியிருக்கும் நான்கு பெண்களுடன் நட்பாகிறார் ஓவியா. அந்த நால்வரில் மூவர் திருமணமானவர்கள், ஒருவர் மட்டும் வேலைக்கு போகும் இளம்பெண். இந்த ஐவர் கூட்டணி ஒன்றாக சேர்ந்து, தம்மடித்து, தண்ணியடித்து, கஞ்சா இழுத்து, செக்ஸ் கதை பேசி பொழுதை கழிப்பது தான் முழுபடமும்.

      'ஆண்கள் செய்யும் அத்தனை விஷயங்களையும் பெண்களாலும் செய்ய முடியும். ஏன் பொண்ணுங்க தம்மடிக்கக் கூடாதா, தண்ணியடிக்கக் கூடாதா, செக்ஸ் பற்றி பேசக்கூடதா' என்று கேட்கும் பெண்ணியவாதிகள் கூட இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் ஷாக் ஆவார்கள். அந்தளவிற்கு படத்தில் எல்லா விசயங்களுமே படுதூக்கலாக இருக்கிறது. படம் முழுக்க அந்த ஐந்து பெண்களும் போதையிலேயே மிதக்கிறார்கள். இது ஒன்றே படம் யதார்த்த வாழ்வில் இருந்து எத்தனை தூரம் தள்ளி நிற்கிறது என்பதற்கு உதாரணம்.