twitter
    Tamil»Movies»Aadai»Story

    ஆடை கதை

    ஆடை இயக்குனர் ரத்னா குமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜி சுப்பிரமணியன் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையமைக்கிறார்.

    பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையில் "அம்மா கணக்கு" திரைப்படத்தினை தொடர்ந்து அமலாபால் , இத்திரைப்படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் படத்தொகுப்பாளர் ஷாபிக்யூ முகமத் அலி இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  உருவாகியிருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தின் இயக்குனரான ரத்னா குமார் "மேயதா மான்" திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

    பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள அமலா பால் ஒரு சில நாட்கள் இப்படத்தில் நிறுவனமாக நடித்திருக்கிறேன் என்று கூறியது, பல சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

    ரிலீஸ்

    இத்திரைப்படத்தின் ஃபிர்ஸ்ட் லுக் போஸ்டரானது 2018 செப்டம்பர் 4ல் வெளியானது. மேலும் இப்படத்தின் திரைக்கதை சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் டீஸர் 2019 ஜூன் 18ல் இணையத்தளத்தில் வெளியானது. இப்படத்தின் டீஸர் வெளியானதும் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. பின்னர் இப்படத்தின் சர்ச்சைகளை படத்தின் விளம்பரமாக மாற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கதை 

    தந்தையை இழந்து அம்மா (ஸ்ரீரஞ்சனி)-ன் வளர்ப்பில் வாழ்ந்து வருகிறார் காமினி (அமலா பால்). இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது குழுவில் தொகுப்பாளர் ரம்யா, விவேக் பிரசன்ன என சிலர் உள்ளனர்.

    அமலா பாலிடம் யாரவது உன்னால் இதனை செய்ய முடியுமா என கேட்டால் உடனே அவர்களிடம் பெட் கட்டி எதையும் செய்து காட்டும் குணம் கொண்டவர். இதனால் அப்பா இல்லாமல் உன்னை வளர்ந்திருக்கிறேன், எனக்கு கெட்ட பெயர் வாங்கி கெடுத்துவிடாதே என தொடர்ந்து அறிவுறுத்தும் தாய். இருப்பிலும் தாயின் புலம்பலை கேட்பது இல்லை.

    இவர் பணியாற்றும் தொலைக்காட்சி டி.ஆர்.பி-காக பிரான்க் ஷோ என்கிற பெயரில் பொதுமக்களிடம் பல விஷயங்கள் செய்கின்றனர் காமினி மற்றும் இவரது குழு.

    இவர் பணியாற்றும் அலுவலகம் வேறு ஒரு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய படுகிறது. அதனால் இவரது அலுவலகத்தில் காலி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அன்று அமலா பாலின் பிறந்தநாள்.

    இவரது பிறந்தநாள் அன்று இவர் மட்டும் இவரது குழு காலி செய்யப்பட்ட அலுவலகத்திற்கு சென்று பார்ட்டி கொண்டாட முடிவு செய்கின்றனர். அந்த பார்ட்டியில் அமலா பால் போதையில் தான் ஆடை இல்லாமல் ஒரு நாள் இரவு முழுவதும் இந்த பில்டிங்கில் இருப்பேன் என சவால் விடுகிறார். 

    மறுநாள் காலையில் விழித்து பார்க்கும்போது அவர் ஆடையில்லாமல் இருக்கிறார். அந்த பில்டிங் முழுவதும், அவரது உடலை மறைக்க ஒரு துண்டு பேப்பரை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

    இவரை இப்படி சிக்க வைத்தது யார்? ஏன்? இவரது நண்பர்கள் எங்கே? இறுதியில் இவர் அங்கிருந்து எப்படி தப்பினார்? என்பதே படத்தின் கதை.

    **Note:Hey! Would you like to share the story of the movie ஆடை with us? Please send it to us ([email protected]).