twitter
    Tamil»Movies»Aan Devathai
    ஆண் தேவதை

    ஆண் தேவதை

    Release Date : 12 Oct 2018
    Director : தாமிரா
    2.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    ஆண் தேவதை இயக்குனர் தாமிரா இயக்கத்தில், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு கிப்ரான் இசையமைக்கிறார். 

    கதை : 

    மேல்தட்டு மக்களைப் போல் வாழவும் முடியாமல், கீழ்த்தட்டு மக்களைப் போல் அனுசரித்துச் செல்லவும் இயலாமல் தவிப்பது தான் பெரும்பாலும் நடுத்தர குடும்பங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இதற்காக அவர்கள் கொடுக்கும் விலை அதிகமானது. இது தான் ஆண் தேவதை படத்தின் கதைக்களம்.

    மெடிக்கல் ரெப் இளங்கோ (சமுத்திரக்கனி), ஐடி ஊழியர் ஜெஸ்ஸிகா (ரம்யா பாண்டியன்) தம்பதிக்கு ஆண்...
    • தாமிரா
      தாமிரா
      Director
    • ஜிப்ரான்
      ஜிப்ரான்
      Music Director
    • tamil.filmibeat.com
      2.5/5
      காட்சிக்கு காட்சி அட்வைஸ் மழை பொழியும் நாயகன் கதாபாத்திரம் கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. ஏற்கனவே முந்தைய நிறைய படங்களில் சமுத்திரக்கனியை இதே போன்ற கருத்துக் கந்தசாமி கதாபாத்திரத்தில் பார்த்திருப்பதால் இளங்கோவின் வசனங்கள் பல இடங்களில் மனதைத் தொடவில்லை. சமுத்திரக்கனி வரும் காட்சிகளில் எல்லாம், 'அய்யய்யோ இப்போ என்ன பேசப் போகிறாரோ?' என்ற பீதியே உருவாகிறது. ஆனால் இதுவும் பழைய விசயம் தான் என்றாலும், வழக்கம்போல் பொறுப்பான தந்தையாக பாராட்டுகளை அள்ளுகிறார், 'சபாஷ்'கனி.

      'ஜோக்கர்' படத்துக்குப் பிறகு ரம்யா பாண்டியனுக்கு நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரம். ஆதிராவாக வரும் பேபி மோனிகாவும், அகர முதல்வனாக வரும் மாஸ்டர் கவின் பூபதியும் ரசிக்க வைக்கிறார்கள். பிக் பாஸ் புகழ் சுஜா வருணி, எப்படியெல்லாம் ஆடம்பரமாக வாழக்கூடாது என வாழ்ந்து காட்டியிருக்கிறார். இவர்கள் தவிர ராதாரவி, காளி வெங்கட், ஹர..