twitter
    Tamil»Movies»Aaruthra»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கவிஞர், பாடலாசிரியர், நடிகன் என தனது அடையாளங்களை வளர்த்து வரும் பா.விஜய்யின் இயக்குனர் அவதாரம் தான் ஆருத்ரா. இந்த படத்தை தயாரித்திருப்பதும் அவரே. முதல் படத்தை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரானதாக எடுத்துள்ள பா.விஜய்க்கு பாராட்டுக்கள்.

      பாடலாசிரியராக உச்சந்தொட்ட பா.விஜய்க்கு, நடிகனாக, இயக்குனராக மேலே உயர இன்னும் நிறைய படிகள் ஏற வேண்டி இருக்கின்றன. படத்தின் கதைக்கரு இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமானது தான். ஆனால் அதை சொல்லியிருக்கும் விதம் தான் உறுத்தலாக இருக்கிறது.

      முதல் பாதி முழுவதுமே படம் ஏனோ தானோவென பயணிக்கிறது. சுமி மாமி, மொட்டை ராஜேந்திரன், பாக்யராஜ் காமெடி எல்லாம் 'கடுப்பேத்துறாங்க மை லார்டு' சொல்ல வைக்குது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்குகின்றன. அதே நேரத்தில், பாலியல் தொடர்பான காட்சிகளை இவ்வளவு டீடெய்லாக காட்டியிருக்க வேண்டாம் பா.விஜய். இது எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் ஆபத்தும் இருக்கிறது.

      ஒரு படத்துக்கு திரைக்கதை மிக முக்கியம். அதில் கவனம் செலுத்த தவறியிருக்கிறார் இயக்குனர் பா.விஜய். எளிதாக யூகிக்கக்கூடிய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், திரில்லிங், சஸ்பென்ஸ் எல்லாம் முன்கூட்டியே உடைந்துவிடுகிறது. அதேநேரத்தில், ஸ்தபதி தொடர்பான காட்சிகள் நல்ல டீலெய்லாக இருக்கிறது.

      சஞ்சய்லோக்நாத்தின் ஒளிப்பதிவும், ஷான் லோகேஷின் எடிட்டிங்கும் தன்னால் முயன்ற வரை படத்தை தரம் உயர்த்த போராடியிருக்கின்றன.