twitter
    Tamil»Movies»Abhiyum Anuvum»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • இளம் காதல் ஜோடியாக டோவினோவும், பியாவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அதிலும் பியாவின் நடிப்பு பல கைத்தட்டல்களை வாங்குகிறது. புற்றுநோயாளிக்களுக்காக முடியை தானம் செய்து மொட்டை தலையுடன் சுற்றுகிறார். பியாவுக்கு தைரியம் அதிகம். தாய்மையை வெளிப்படுத்தும் தருணங்களிலும், காதலை இழந்துவாடும் நிலையிலும் அபாரமாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள் பியா.

      இன்றைய இளைஞர்கள் எப்படி காதலிக்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி. இது போன்ற சப்ஜெக்ட்டை எடுக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும். அதற்காகவே பாராட்டலாம். இன்றைய காலகட்டத்தில் ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள, இணையமே போதுமானதாக இருக்கிறது என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.

      கதாநாயகனுக்கும், நாயகிக்கும் தங்கள் உறவு குறித்து தெரிந்ததும் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள். அது இயல்பு தான். ஆனால் க்ளைமாக்ஸ் வரை அப்படியே இருபார்களா என்ன? என யோசிக்க வைக்கிறது. இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை எளிதாக யூகிக்க முடிவதால், திரைக்கதையில் பெரிய சுவாரஸ்யம் இல்லை.

      தரன் இசையில் 'எங்கடா போன' பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. சரிகமபதநிச பாடலும் முனுமுனுக்க வைக்கிறது. அகிலனின் ஒளிப்பதிவு, முன்பாதி வெளிச்சத்தையும், பின்பாதி இருளையும் சரியாக படம் பிடித்திருக்கிறது. சுனில் ஸ்ரீநாயரின் படத்தொகுப்பில், பின் பாதி கொஞ்சம் இழுவை. எல்லாவற்றுக்கும் அவரசப்பட்டு முடிவெடுக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள், பிரச்சினை என்று வரும் போது, அதை எப்படி கையாள வேண்டும் என தெரியாமல் தடுமாறுகிறார்கள். உறவுச்சிக்கல்களை எப்படி கையாள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அதை யதார்த்தமாக வெளிப்படுத்திய விதத்தில் 'அபியும் அனுவும்' அவசியான படம் தான்.