விமர்சகர்கள் கருத்து

    • செம பிட் போலீஸாக ஜெயம் ரவி கலக்குகிறார். டெக்னாலஜியை கொண்டு எதிரகளை கதறவிடுவது, திமிறி எழுந்து சாவல்விட்டு திருப்பி அடிப்பது, காதலியுடன் கில்மா செய்வது, குடும்பத்துடன் பாசம் காட்டுவது என தனிஒருவனாக படத்தை சுமக்கிறார். எத்தனை போலீஸ் படத்தில் நடித்தாலும், வித்தியாசம் காட்டும் உடல் மொழியை எளிதாக கையாள்கிறார்.

      மிக யதார்த்தமான, அதேநேரத்தில் பவர்வுல்லான ஆக்ஷன் காட்சிகளை அமைத்த ஸ்டன் சிவாவுக்கு தனி பாராட்டுகள். ஜெயம் ரவிக்கு ஏற்ப நம்பகதன்மையுடன் ஸ்டன்ட் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

      ஏற்கனவே வந்த பல நூறு போலீஸ் படங்களின் பட்டியலில் அடங்கிவடுகிறது இந்த 'அடங்க மறு'.