TamilbredcrumbMoviesbredcrumbAdhibarbredcrumbCritics Review

    விமர்சகர்கள் கருத்து

    • வெளிநாட்டில் செட்டிலான தமிழன், தாயகம் திரும்பி மீண்டும் சுயமாய் தொழில் செய்யும்போது சொந்த நாட்டுக்காரர்களே எப்படியெல்லாம் காலை வாருகிறார்கள், துரோகம் செய்கிறார்கள் என்பதை சொதப்பலாகச் சொல்லியிருக்கிறார்கள் அதிபர் படத்தில்.

      நான்கைந்து ஆண்டுகள் காணாமல் போயிருந்த ஜீவன், அதே முடி, வறட்சியான நடிப்போடு திரைக்குத் திரும்பியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மட்டும் வெளுத்தெடுக்கிறார். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

      வெளிநாட்டிலிருந்து தாய் நாடு திரும்பும் ஒருவன் சந்திக்கும் நெருக்கடிகள் என்ற எதார்த்தமான விஷயத்தை கதையாக்கிய இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டாமா? அதில் தவறியதால் இந்த 'அதிபர்', தன் நாற்காலியைக் கோட்டை விட்டிருக்கிறார்!