TamilbredcrumbMoviesbredcrumbAghavanbredcrumbCritics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ரூபாய் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த கிஷோருக்கு நாயகனாக இது முதல் படம். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மிக யதார்த்தமாக நடித்துள்ளார். மிகவும் சாந்தமாக பக்கத்து வீட்டு பையன் போல இயல்பாக தெரிகிறார். மர்மங்களை தேடிச்செல்லும்போது தன்னுடைய பதற்றத்தையும் ஆர்வத்தையும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

      தம்பி ராமய்யா படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார். அவருக்கு 'எங்கே இருந்தோ' வரும் கவுண்டர் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. இன்னொரு ஜோடி நரேன், பிரியங்காவும் சிறப்பான அறிமுகங்கள். பேய் படம் போல தொடங்கி திரில்லராக மாறி, கடைசியில் மிக அவசியமான ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர். கடைசி 30 நிமிட காட்சிகள் ரசிகர்களை பரவசப்படுத்துகின்றன. கோவில்கள் கட்டியதற்கான அடிப்படை காரணங்களை விளக்கும் இடங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கருத்தை விறுவிறுப்பாக சொல்கிறான் இந்த அகவன்.