twitter
    Tamil»Movies»Agni Devi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஜானாவின் ஒளிப்பதிவில், இரண்டு கண்டெய்னர் லாரிகள் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் 'ஹெலிகேம் டாப் வியூ' காட்சி மிரட்டலாக இருக்கிறது. அதேபோல், சண்டை காட்சிகளையும் அருமையாக படம்பிடித்திருக்கிறார்.

      முதல் பாதியை சுவாரஸ்யமாக எடிட் செய்த தீபக், இரண்டாம் பாதியையும் அதேபோல் கட் செய்திருக்கலாம். படத்தின் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களுமே தங்கள் பணியை முழுமையாகவும், சரியாகவும் செய்யவில்லை. இதனால் டிரெய்லரில் இருந்த சுவாரஸ்யம் படத்தில் மிஸ்ஸிங். அக்னிக்கும் தேவிக்கும் இடையே நடக்கும் சண்டையை இன்னும் கொஞ்சம், அழுத்தமாக காட்டியிருந்தால், இரண்டாம் பாதி படமும் நன்றாக இருந்திருக்கும். எம்.எஸ்.பாஸ்கர் போன்ற நல்ல நடிகர்களை, இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.

      அதேபோல், இத்தனைக்கும் காரணம் கலவரங்கள் தான் பழிபோடுவதும் டூமச் பாஸ். ராஜேஷ் குமாரின் நாவலை படிக்கும் போது ஏற்படும் சுவாரஸ்யத்தை, படம் பார்க்கும் போதும் ஏற்படுத்தியிருந்தால், இந்த அக்னி தேவி, தீப்பிழம்பாய் தகித்திருக்கும்.