விமர்சகர்கள் கருத்து

  • பாளக் ஹூமர் பாணியில் தத்துவார்த்மாக கதை சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெய். பிளாக் ஹூமர் என்பது படத்தின் அறிவிப்பு பலகையில் மட்டுமே இருக்கிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது. படம் பார்க்க நிறைய பொறுமை தேவைபடுகிறுது. எல்லா காட்சிகளுமே மிக மெதுவாக நகர்கிறது.

   'இது காமம் இல்ல காதல்' என ரத்னாவிடம் பாலா சொல்லும் இந்த வசனத்தின் மூலம் செக்ஸ் தான் காதல் என்பதை அழுத்தமாக சொல்கிறார் இயக்குனர் ஜெய். சில வசனங்கள் தத்துவார்த்தமாக இருக்கிறுது.அதே வேளையில் டபுள் மீனிங் டயலாக்குகளும் அதிகம்.

   காதல் முறிவால் வரது எடுக்கும் முடிவு, அவர்களை கொள்ளைக்காரர்களாக ஓடவிடுகிறுது. ஆனால் காதல் கைக்கூடியதால் ரத்னா எடுக்கும் முடிவு, அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துகிறது. அதெல்லாம் சரி படத்துக்கு எதற்கு ஆந்திரா மெஸ் என பெயர் வைத்தார் இயக்குனர் என்பது தான் கடைசி வரை புரியவில்லை.

   மொத்தத்தில் ஆதிக்கவாதியாகவே இருந்தாலும் ஆண்கள் எப்போதுமே வீக்கர் செக்ஸ் தான் என்கிறது படம். இன்னும் கொஞ்சம் காரம், உப்பு, புளிப்பு எல்லாம் சேர்த்திருந்தால், ஆந்திராவுக்கே சென்று புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி கிடைத்திருக்கும்.