twitter

    விமர்சகர்கள் கருத்து

    • மட்ட சேகர் பாத்திரத்தை நிதானம் தவறாமல் செய்திருக்கிறார் தினேஷ். அட்டக்கத்தி ரூட்டு தல இப்போ நாட்டுக்கே தல என்று கெத்து காட்டியிருக்கிறார். சீரியசாக அவர் செய்யும் காமெடிகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. சவுண்டு கொடுத்தே எதிரிகளை ஓடவிடுவது, நெஞ்சை நிமிர்த்தி பார்வையிலேயே அசால்ட் செய்வது என கலக்கியிருக்கிறார். குறிப்பாக 'குக்கூ' பாதிப்பில் இருந்து பெருமளவுக்கு வெளியே வந்துவிட்டார்.

      அடாவடி காதலி சுந்தரியா ரசிக்க வைக்கிறார் மஹிமா. டல் மேக்கப்பிலும் அழகாகவே தெரிகிறார். பெரிதாக வேலை ஏதும் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்.

      நமது அரசியல் அமைப்பை நச்சென கலாய்க்கும் விதத்தில் பர்ஸ்ட் கிளாஸில் பாசாகியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். அடிமட்ட தொண்டர்களை அரசியல் தலைவர்கள் எப்படி தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை நன்றாகவே நையாண்டி செய்திருக்கிறார். 'டாஸ்மாக்கை மூடி கள்ளுக்கடைகளை திறங்க' எனும் பிரச்சாரத்தை, பிரச்சாரமாக இல்லாமல் காட்சிகளின் மூலம் கடத்துகிறார் இயக்குனர். பாராட்டுக்கள் ராஜ்குமார்.

      அரோல் குரேலியின் இசையில் மட்ட சேகரு பிஜிம் மட்டும் அதிர வைக்கிறது. மற்றபடி பாடல் எல்லாம் சுமார் ரகம். ஒரு ஊரை சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமியின் கேமரா. எடிட்டர் ஜி.பி.வெங்கடேஷ் தனது பணியை செம்மையாக செய்திருக்கிறார்.