twitter

    அண்ணனுக்கு ஜே கதை

    அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ், மஹிமா நம்பியார் நடித்த அரசியல் வஞ்சப்புகழ்ச்சி சார்ந்த திரைப்படம். 

    கதை :

    அப்பா முருகேசனுடன் (மயில்சாமி) சேர்ந்து கள் இறக்கும் தொழில் செய்து வருகிறார் மட்ட சேகர் (தினேஷ்). கட்டிங் சரக்குக்கு மேல் நடித்தாலே மட்டையாகிவிடுவார் என்பதால் தான் சேருக்கு இந்த அடைமொழி. மட்ட சேகரின் காதலியாக சுந்தரி (மஹிமா). இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், உள்ளூர் அரசியல் பிரமுகரான செல்வா (ஸ்டன்ட் தீனா) மட்ட சேகருக்கு வில்லான வருகிறார். முருகேசனின் கள்ளுக்கு அதிக மவுசு இருப்பதால், செல்வாவின் டாஸ்மாக் பார் கல்லாகட்டாமல் திணறுகிறது. இதனால் கடுப்பாகும் செல்வா, முருகேசனை போலீசில் போட்டுக்கொடுக்கிறார். முருகேசனை போலீஸ் அடிவெளுக்க, செல்வாவின் எதிர்கோஷ்டியை சேர்ந்த அரசியல்வாதி பரசுராமன் (ராதாரவி) மூலம் அப்பாவுக்கு கட்சிப் போஸ்டிங் வாங்க அரசியல் களம் காண்கிறார் மட்ட சேகர். அரசியலில் அவர் சாதித்தாரா இல்லை மட்டையானாரா என்பதை நக்கலும் நையாண்டியுமாக சொல்கிறது அண்ணனுக்கு ஜே.
    **Note:Hey! Would you like to share the story of the movie அண்ணனுக்கு ஜே (2018) with us? Please send it to us ([email protected]).