twitter
    Tamil»Movies»Antony»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஆண்டனி மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் நிஷாந்துக்கு முதல் படத்திலேயே கனமான பாத்திரம். மண்ணுக்குள் புதைந்து பெரும் சிரமப்பட்டிருக்கிறார். ஓரளவுக்கு திறம்படவே நடித்திருக்கிறார். ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கும் வைஷாலிக்கு, வழக்கமான தமிழ் சினிமா நாயகிக்கான டெம்பிளேட் கதாபாத்திரம்.

      பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. தமிழ் சினிமாவில் வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்ட லாலுக்கு, மகனை தேடும் தந்தை பாத்திரம். அவரளவுக்கு சரியாக செய்திருக்கிறார். ரேகாவிற்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. சும்மா வந்து போகிறார். வில்லனாக அறிமுகமாகி இருக்கம் தயாரிப்பாளர் வெப்பம் ராஜா, சுமார் ரகத்தில் மிரட்ட முயல்கிறார்.

      இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஆண்டனி.அதைத்தவிர படத்தில் புதிதாக எதுவும் இல்லை.