விமர்சகர்கள் கருத்து

    • ஏற்கெனவே ஹிட்டடித்த ஒரு பேய்ப் படத்துக்கு இரண்டாம் பாகம் எடுக்க என்ன தேவை? அந்தப் படத்தின் டெம்ப்ளேட்டுக்குள் பொருந்துகிற மாதிரி சில பேய்கள், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் த்ரில் கிராபிக்ஸ்... இவற்றை சுவாரஸ்யமாக கோர்க்கத் தெரிந்த சாமர்த்தியம்.

      ராகவா லாரன்ஸ் மாதிரியே, இந்த விஷயத்தில் சுந்தர் சியும் கில்லாடிதான்.

      சித்தார்த்துக்கு பெரிய ஸ்கோப்பில்லாத வேடம். ஏற்ற வேடத்துக்கேற்ப நன்றாகவே பயந்திருக்கிறார்.

      முதல் முறை கவர்ச்சிப் பேயாக வரும் த்ரிஷாவும் குறை வைக்கவில்லை.

      ஹன்சிகாவுக்கென்றே வடிவமைத்த வேடம் போலிக்கிறது. அழுத்தமான வேடம். மனதில் நிற்கிற மாதிரி நடித்துள்ளார். அவருக்கான அந்த அறிமுகப் பாட்டு சூப்பர். பூனம் பாஜ்வாவையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் சுந்தர்.

      பார்த்த, பழகிய கதை என்ற ஒன்றைத் தவிர, குறை சொல்ல ஏதுமில்லை. ஜாலியாகப் பொழுது போகிறது. அது போதாதா!