twitter
    Tamil»Movies»Asuravadham»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்துக்கு பிறகு, இயக்குனர் மருதுபாண்டியின் அடுத்தப்படம் இது. வலுவான மற்றும் அவசியமான கதை களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை பதற்றத்தில் மூழ்கடிக்கிறார். ஆனால் இடைவேளைக்கு பிறகும் அந்த சஸ்பென்சை நீட்டிப்பதும், ஒரு வில்லனையே ஹீரோ துரத்துவதும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது.

      சுப்பிரமணியபுரம், நாடோடிகள் படத்தில் தொடங்கி கிடாரி வரை நாம் பார்த்த அதே சசிகுமார். சுவற்றில் ஒற்றைக்காலை வைத்து சாய்ந்து நிற்பது, சிகரெட்டை ஊதித்தள்ளுவது என மீண்டும் மீண்டும் அதே சசிகுமார். ஒரே ஆறதல், 'ஏய்ய்ய்ய் ஊய்ய்ய்' என கத்தி அலப்பறையை கூட்டாமல், சைலண்டாகவே டெரர் காட்டுகிறார். காதலின் பின்னால் சுற்றாமல், கணவனாக, தந்தையாக இந்த படத்தில் மாறியிருக்கிறார்.

      ஹீரோயின் நந்திதாவுக்கு ஒரு சில காட்சிகள் மட்டுமே. அவரால் முடிந்தவரை தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். குட்டிப்பாப்பா அவிகா சூப்பர். வில்லனாக அறிமுகமாகியிருக்கும், வசுமித்ரா சினிமாவுக்கு நல்ல வரவு.