twitter
    Tamil»Movies»Ayogya»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • படம் சொல்ல வரும் செய்தி சமூகத்துக்கு மிகவும் அவசியமானது. ஆனால் அதை சொன்னவிதத்தில் தான் மசாலா நெடி மிக அதிகமாக இருக்கிறது. மூளைக்கு வேலையே கொடுக்காமல், அயோக்யாவை ஒரு கமர்சியல் சினிமாவாக மட்டும் பார்த்தால் நிச்சயம் ரசிக்கலாம்.

      கேடுகெட்ட போலீஸ் அதிகாரியாக வரும் விஷால், அந்த கதாபாத்திரத்தின் மீது கோபம் வரும் அளவுக்கு நடித்திருக்கிறார். வழக்கம் போல் ஆக்ஷன் காட்சிகளில் பட்டய கிளப்புகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோயிச இமேஜை உடைத்தெறிந்ததற்கு பாராட்டத்தக்கது விஷால். தெலுங்கு ஹீரோக்களுக்கு இந்த துணிச்சல் வராது.

      ராஷி கண்ணாவுக்கு வழக்கமான ஹீரோயின் வேடம் தான். அழகாக இருக்கிறார். மனதை கொள்ளை கொள்கிறார். கொஞ்சம், கொஞ்சம் நடித்தும் இருக்கிறார்.

      பக்கா மசாலா படமாக இருந்தாலும், நல்ல மெசேஜ் சொன்னதால் மன்னிக்கப்படுகிறான் இந்த அயோக்யா.