twitter
    Tamil»Movies»Baahubali»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பாகுபலி... இந்த ஆண்டு முழுவதும் பேசினாலும் தீராத பிரமிப்பு இந்தப் படம்.

      டென் கமாண்ட்மென்ட்ஸ், லாரன்ஸ் ஆப் அரேபியா, க்ளாடியேட்டர், அவதார் என பிரம்மாண்டத்துக்கும் செய்நேர்த்திக்கும் ஹாலிவுட் படங்களை இந்தியர்கள் உதாரணம் காட்டி வந்த காலம் மலையேறிவிட்டது.

      இதோ.. நம்மிடமே ஒரு அழுத்தமான அற்புதமான உதாரணம் இருக்கிறது... ராஜமவுலியின் பாகுபலி!

      2.40 மணி நேரப் படம்... ஆனால் 'என்னங்க.. படம் அதுக்குள்ள முடிஞ்சிருச்சே... அந்த இன்னொரு பார்ட் காட்சிகளையும் சேர்த்தே ரிலீஸ் பண்ணிருக்கலாம்!' என்று சிலர் அடித்த கமெண்ட்தான் இந்தப் படத்துக்குக் கிடைத்த உச்சபட்ச பாராட்டாக இருக்கும் என நம்புகிறேன்.