twitter
    Tamil»Movies»Bhoomi»Story

    பூமி கதை

    பூமி இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படமானது நடிகர் ஜெயம் ரவியின் தமிழ் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 25வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுஜாத்தா விஜயகுமார் தயாரிக்க, இசையமைப்பாளர் இம்மான் இசையமைத்துள்ளார்.

    அதிரடி மற்றும் விவசாயத்தை சார்ந்த திரைக்கதையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஒளிப்பதிவாளர்  டூட்லே ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் ஜான் ஆப்ராஹம் இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர்.




    பூமி திரைப்படத்தின் கதை

    கதைக்கரு: அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு கூடத்தில் இருக்கும் ஜெயம் ரவி, விண்வெளியில் விவசாயம் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். இதனால் உலகம் முழுவதும் பிரபலமாகும் ஜெயம் ரவி, தனது குடும்பத்தோடு தமிழகம் வருகிறார். தனது சொந்த ஊரில் விவசாயம் செய்ய இயலாமல் இருக்கும் பல விவசாயிகளை பற்றி அறியும் இவர், பின்னர் அவர்களுக்காக போராடுவதே இப்படத்தின் கதை.

    கதை: பூமிநாதன் (ஜெயம் ரவி) நாசா விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் ஒரு முன்னணி விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் இவர், தனது 1 மாத விடுமுறையில் இவரது தாய் சரண்யா பொன்வண்ணன் உடன் இந்தியாவில் தனது சொந்த கிராமத்திற்கு வருகை தருகிறார்.

    காதலி நிதி அகர்வால் மற்றும் நண்பர்களுடன் பழகி நேரங்களை செலவிடும் இவர், தனது உறவினர் தம்பி ராமையாவின் விவசாய கஷ்டங்களை காண்கிறார். விவசாயத்தில் பெரிய அளவில் நஷ்டமாகி அரசாங்கத்திடம் நஷ்ட ஈடு கேட்டு போராடும் இவர், அரசாங்க அதிகாரிகளால் துன்புறுத்தப்படுகிறார். இதன் காரணமாக தம்பி ராமையா கலைக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்கிறார்.

    இச்செயல்களை கண்டு கோபமடையும் ஜெயம் ரவி, அரசாங்க அதிகாரிகளிடம் தனது கோபத்தை சரமாரி கேள்விகள் மூலம் வெளிப்படுத்துகிறார். இதனால் தொலைக்காட்சி செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்களை மக்களின் கவனத்தை கவர்கிறார்.

    நாசா நிருவாகம் ஜெயம் ரவியை உடனடியாக அழைத்து இவரை மிரட்டுகிறது. இதனால் அந்த பணியில் இருந்து விலகும் ஜெயம் ரவி, சொந்த ஊர்க்கு விவசாயம் செய்ய வருகிறார். 

    5 மாதத்தில் 6 லட்சத்திற்கு மேலாக லாபம் அடையும் ஜெயம் ரவி, விவசாய கூட்டணியில் மிக பெரிய அளவில் பிரபலமாகிறார். இதனால் தனியார் நிறுவனம் அதிகாரிகளின் தூண்டுதலில் அரசாங்க அதிகாரிகளால் தாக்கப்படுகிறார், ஜெயம் ரவி. பின்னர் வெளிநாட்டு நிறுவனத்தின் தலைவரான ரோனிட் ராய் வருகை தந்து ஜெயம் ரவியை மிரட்டுகிறார்.

    பின் ரோனிட் ராய் மற்றும் ஜெயம் ரவிக்கு இடையில் நடக்கும் யுத்தம் தான் பூமி திரைப்படத்தின் கதை.படிப்படியாக ஜெயம் ரவி செய்யும் செயல்களில் சில தொந்தரவு செய்யும் ரோனிட் ராய், அதனை ஜெயம் ரவி தனது சாமர்த்தியம் கொண்டு கையாளுவது என கதை நகர்கிறது.

    மக்களுக்காக பாடுபடும் ஜெயம் ரவி, இறுதியில் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார். பின் என்ன நடந்து என்பதே திரைக்கதை.

    பூமி திரைப்படத்தின் தகவல்கள்

    இத்திரைப்படத்தினை பற்றிய முதற்கட்ட அறிவிப்பை இப்படத்தின் படக்குழு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 19ல் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். பின்னர் பூமி இத்திரைப்படத்தின் தலைப்பினை அதிகாரப்பூர்வமாக 2019 அக்டோபர் 12ல் இணையதள ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

    பூமி திரைப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தியேட்டர் பணி நிறுத்தம் காரணம் மற்றும் படக்குழுவில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக, இத்திரைப்படம் ஆன்லைன் ஓடிடியில் 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் வெளியாகவுள்ளது.

    பூமி  ஓடிடி ரிலீஸ்

    பூமி  திரைப்படம் சில காரணங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் இப்படம் இணையதள ஓடிடி மூலம் வெளியாகவுள்ளது. முதலில் சன் நெக்ஸ்ட் செயலியில் வெளியிட இப்படத்தின் படக்குழுவை அணுகியது சன் நெட்ஒர்க் மற்றும் சன் தொலைக்காட்சி நிறுவனம்.

    சன் தொலைக்காட்சியில் இப்படம் வெளியாகும் என தமிழ் திரைப்பட ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்னர் பூமி திரைப்படத்தின் செயற்கைக்கோள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான உரிமையை ஸ்டார் விஜய் நிறுவனம் பெற்று, அந்நிறுவனத்தின் ஆன்லைன் ஓடிடி செயலியில் இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. 

    ஜெயம் ரவி, நிதி அகர்வால் மற்றும் தமிழ் திரைப்பட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள பூமி  திரைப்படம், 2021 பொங்கல் பண்டிகைக்கு ஒரு சிறப்பு திரைப்படமாக 'டிஸ்னி + ஹாட்ஸ்டார்' செயலியில் வெளியாகிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie பூமி with us? Please send it to us ([email protected]).