twitter
    Tamil»Movies»Billa pandi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • வில்லனாக அறிமுகமாகி குணச்சித்திர நடிகராக மாறிய ஆர்.கே.சுரேஷ், இந்த படம் மூலம் ஹீரோவாக புரோமோஷன் பெற்றிருக்கிறார். காதல், சென்டிமெண்ட் காட்சிகளில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அஜித் ரசிகராக தல வசனங்களை அவர் பேசும்போது தியேட்டரில் கைத்தட்டல்கள் பறக்கின்றன. ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். லேசாக ராஜ்கிரண் சாயல் தெரிகிறது.

      சாந்தினி, இந்துஜா என படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், இருவருக்குமே பெர்பாமன்ஸ் செய்ய நிறைய வாய்ப்புகள் படத்தில் இருக்கின்றன. நிறைவாகவே செய்திருக்கிறார்கள். நகரத்து கதாபாத்திரத்திலேயே பார்த்த சாந்தினிக்கு முதல் முறையாக கிராமத்து முறைப்பெண் வேடம். சிறப்பாக நடித்திருப்பது மட்டுமின்றி, அழகாக ஜொலிக்கிறார். இந்துஜா எளிமையாக வந்து, பெர்பாமன்ஸ் செய்து கவர்கிறார்.

      தம்பி ராமையாவின் காமெடி லேசாக கிச்சுகிச்சு மூட்டுகின்றன. அமுதவாணனை இன்னும் கூட பயன்படுத்தி இருக்கலாம். கெஸ்ட் ரோலில் வரும் சூரியும், விதார்த்தும் சர்ப்ரைஸ் மொமண்ட் தருகிறார்கள். தயாரிப்பாளர் கே.சி.பிரபாத்துக்கு வில்லன் புரோமோஷன். இவர்களை தவிர, சௌந்தரராஜன், மாரிமுத்து, சங்கிலி முருகன் உள்ளிட்டோர் படத்தில் 'நடித்திருக்கிறார்கள்'.

      காமெடி நடிகராக அறியப்பட்ட ராஜ் சேதுபதி இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். கதைக்காக பெரிதாக மெனக்கெடாமல், எம்எம்எஸ் மூர்த்தியின் கதையை எடுத்துக்கொண்டு, அதை வியாபார ரீதியாக மெருகேற்றியிருக்கிறார்.

      முதல் பாதி படம் எதை நோக்கி செல்கிறது என்பதே புரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் மசாலாவை தூவி பி மற்றும் சி சென்டர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். இதனால் ஒரு முழு படமாக திருப்தி தருகிறான் இந்த பில்லா பாண்டி.

      மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு 'தல தீபாவளி' விருந்தாக வந்திருக்கிறது பில்லா பாண்டி.