twitter
    Tamil»Movies»Bongu»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கார் திருட்டை அடிப்படையாகக் கொண்ட படம். ஒரு ஹாலிவுட் படத்தின் அன்அஃபிஷியல் ரீமேக் மாதிரியான ஒரு கதை இந்த போங்கு.

      அதே நட்டி. படபடப்பு பேச்சு, ரஜினியை நகலெடுத்த மாதிரி உடல் மொழி. ஆனால் சதுரங்க வேட்டை அளவுக்கு இதில் அவரது பாத்திரம் அமையவில்லை.

      ரூஹி சிங் கூட்டத்தோடு கூட்டமாகிவிடுகிறார். முனீஸ்காந்த், அர்ஜுனன் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.

      வில்லன் சரத் லோஹிதஸ்வாவுக்கு மிரட்டலான ரோல். கச்சிதமாக செய்திருக்கிறார். அதுல் குல்கர்னி கொஞ்ச நேரம் வந்தாலும் கவர்கிறார்.

      இடைவேளைக்குப் பிறகு வசனங்கள் நன்றாக இருந்தாலும், முதல் பாதியில் சொல்லிக் கொள்ளும்படி திருப்பங்களோ, ஈர்க்கும் காட்சிகளோ இல்லை.

      மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவா இசை ஓகே.

      பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் போனால், ஒரு முறை பார்க்கலாம்.