twitter
    Tamil»Movies»Bongu»Story

    போங்கு கதை

    போங்கு புதுமுக இயக்குனர் தாஜுதீன் இயக்கத்தில் நட்டி நடராஜ் மற்றும் ருஹி சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடராஜ் ஒரு கார் திருடனாக நடித்துள்ளார்.

    கதை :

    ஒஸ்தியான கார்கள் விற்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் நண்பர்கள் நட்டி, ரூஹி மற்றும் அர்ஜுன். எம்எல்ஏ மகளுக்கு அந்த நிறுவனத்திலிருந்து ஒரு கார் சப்ளை செய்யப் போகிறார்கள் நட்டியும் அர்ஜுனும். வழியில் சிலர் அந்தக் காரை கடத்திவிடுகிறார்கள். நிறுவனத்துக்கு நட்டி, அர்ஜுன் மீது சந்தேகம். ஜெயிலில் தள்ளிவிடுகிறார்கள். ரூஹிக்கும் கல்தா.

    சிறையிலிருக்கும் இருவரையும் ரூஹி வெளியில் எடுக்கிறார். ஜெயில் அனுபவத்தை வைத்துக் கொண்டு கார் கடத்தலில் இறங்குகிறார் நட்டி. நண்பர்கள் துணை நிற்க, முதல் திருட்டிலேயே கோடிகளில் பணம்.

    அப்போதுதான் ஒரு அசைன்மென்ட் கிடைக்கிறது. மதுரை தாதா சரத் லோஹிதஸ்வாவிடம் உள்ள 10 காஸ்ட்லி கார்களைத் திருட வேண்டும். உடனே மதுரைக்குக் கிளம்புகிறது நட்டி அன்ட் கோ. அங்கே பார்த்தால், பத்து கார்களில் ஒன்றாக தங்களிடமிருந்து கடத்தப்பட்ட காரும் நிற்கிறது. அதன் பிறகு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie போங்கு with us? Please send it to us ([email protected]).