விமர்சகர்கள் கருத்து

    • திரைக்கதைப்படி, ஆன்லைன் திருமண தரகரான பிரபுதேவாவுக்கு, சமூக ஆர்வலர் (?) நிக்கி கல்ராணி மீது ஒரு தலைகாதல். ஆனால் இன்னும் 15 நாட்களில் இறக்கப் போகும் இதய நோயாளியான தனது தோழியை (கோலிசோடா சீதா) தான் பிரபுதேவா காதலிக்கிறார் என தவறாக புரிந்துகொள்கிறார்கள் நிக்கியும், அவரது தந்தை பிரபுவும். ஒருகட்டத்தில் பிரபுதேவா தன்னை தான் காதலிக்கிறார் என நிக்கிக்கு தெரியவர, அவரும் காதலில் விழுகிறார். இதற்கு பிரபுவும், பிரபுதேவாவின் லூசுக்குடும்பமும் (அவங்களே அப்படி தான் இண்ட்ரோ தராங்க) ஒத்துக்கொள்கிறது.

      வாட்ஸ்அப் மெசேஜ், புளூ டிக் போன்ற சின்ன விஷயங்களை வைத்துக்கொண்டு உருவாகியுள்ள பெரிய பட்ஜெட் படம் இது. ஆனால் அதற்கு தகுந்த சரக்கு படத்தில் இல்லை. நல்ல காமெடி நடிகர்ளை நடிக்க வைத்திருந்தால், ஒர்க்கவுட் ஆகியிருக்கும்.