twitter

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு பாராவுக்குள் அடங்கிவிடும் இந்த கதையை தான், முழு நீள படமாக டெவலப் செய்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். 35 ஆண்டுகளில் அவருக்கு இது 26வது படம். இத்தனை ஆண்டுகளாக சினிமா எடுத்துக்கொண்டிருப்பதற்கு, மணிரத்னத்தின் இந்த நிதானம் தான் காரணம்.

      திரைக்கதை, வசனம், பாடல்கள், ரொமான்ஸ் என இது ஒரு அக்மார்க் மணிரத்னம் படம். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவருமே மனதில் நிற்கிறார்கள். அந்த அளவுக்கு பாத்திர படைப்புகள் கச்சிதம். தனது வழக்கமான ஸ்டைலிஷ் காட்சி அமைப்புகளால் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார். ஆனால் ஆக்‌ஷன் படம் என்பதற்காக இவ்வளவு வன்முறையும், கொலைகளும் தேவைதானா மணி சார்.

      பாடல்களைவிட பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். ரஹ்மானின் பின்னணி இசை, படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது.

      அரவிந்த்சாமிக்கு தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து இப்படம் நிச்சயம் முக்கியமானதாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. பாடிலாங்குவேஜில் மிரட்டுகிறார்.

      விதவிதமான லொகேஷன்கள் கண்ணளுக்கு குளிரூட்டுகின்றன. ஆனால் காதை பிளக்கும் துப்பாக்கி சத்தம் எரிச்சல் அடைய செய்கின்றன. என்ன தான் அண்ணன், தம்பிகளுக்குள் பகை இருந்தாலும், இப்படியா மோதிக்கொள்வார்கள். நிச்சயமாக குழந்தைகளை அழைத்து செல்ல முடியாது. அதேபோல் படத்தின் மற்றொரு குறை, எளிதாக யூகிக்கக்கூடிய திரைக்கதையும், பழைய க்ளைமாக்சும் தான்.