twitter
    Tamil»Movies»Darling 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • முன்பெல்லாம சினிமாவில் வரும் பேய்களில் பெரிய வித்தியாசம் ஏதுமிருக்காது. பழி வாங்குதல்தான் பிரதானமாக இருக்கும். ஆனால் இப்போது வெரைட்டியான பேய்களைக் காட்ட ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். ஆனால் ரசிக்கத்தான் முடிவதில்லை!

      கலையரசன், ரமேஷ், காளி வெங்கட், ஜானி, அர்ஜுனன் என ஐந்து நண்பர்கள். வால்பாறைக்கு பேச்சிலர் பார்ட்டி கொண்டாடப் போகிறார்கள். ஒரு அமானுஷ்யமான பங்களாவில் தங்குகிறார்கள். அங்குதான் கலையரசன் உடம்பில் ஆவி புகுந்து, அவரை கொல்லப் போவதாக மிரட்டுகிறது. கொன்றதா... இல்லையை என்பது மீதிக்கதை.

      வால்பாறையை கதைக் களமாக்கியது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் திரைக்கதையில் அழுத்தமும் இல்லை, காட்சி அமைப்பில் ஈர்ப்புமில்லை.

      நாயகி மாயா புதுமுகம். நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் பார்க்க லட்சணமாக இருக்கிறார்.

      பேய்ப் படங்கள் என்றால் ஒன்று பயமுறுத்த வேண்டும்... அல்லது கிச்சுகிச்சு மூட்ட வேண்டும் என்பது இன்றைய கோடம்பாக்க விதி. இந்தப் படத்தில் இரண்டுமே இல்லை!