twitter
    Tamil»Movies»Devi 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • முதல் பாகத்தில் ஒரு பேய். இந்த பாகத்தில் இரண்டு பேய். தேவியின் கதை களம் மும்பை. தேவி 2வின் கதை களம் மொரிசியஸ். அந்தப் படத்தில் தமன்னாவுக்கு பேய் பிடிக்கும். பிரபு தேவாவுடன் பேய் கான்ட்ராக்ட் போடும். இந்த படத்தில் உல்டாவாக பிரபுதேவாவுக்கு பேய் பிடிப்பதால், தமன்னா ஒப்பந்தம் போடுகிறார். அவ்வளவு தான் வித்தியாசம். மற்றப்படி இரண்டும் ஒன்றும் தான்.

      பேயை காட்டாமல் பேய் படம் எடுப்பது எப்படி என்று இயக்குனர் விஜய்யிடம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அந்தளவிற்கு இருக்கு ஆனா இல்லை என்ற அளவில் பேய் வந்து போகிறது. பேயைக் காட்டா காமெடி தான் படத்தின் மையம் என முடிவு செய்துவிட்ட பிறகு லாஜிக் எல்லாம் எதுக்கு. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கலகலப்பாக நகர்கிறது படம். குறிப்பாக குழந்தைகளுக்கு இப்படம் கட்டாயம் பிடிக்கும்.

      போன படத்தில் பிரபு தேவா செய்ததை, இந்தப் படத்தில் தமன்னா செய்து அசத்தி இருக்கிறார். காமெடி, சோகம், கோபம், கிளாமர் என எதற்கும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களுக்கு புல்மீல்ஸ் விருந்து படைத்திருக்கிறார். குறிப்பாக அந்த ஒரு பாட்டு போதும், ரசிகர்கள் முழு திருப்தியோட வீட்டுக்கு போவாங்க.