விமர்சகர்கள் கருத்து

  • முதல் முறையா ஒரு பேய்ப் படம்... பெரிய கிராபிக்ஸ் காட்சிகள், காதுகளைக் கிழிக்கும் எக்ஸ்ட்ரா டெஸிபல் சத்தங்கள் இல்லாமல் வந்திருக்கிறது.

   உண்மையிலேயே பிரபு தேவா கலக்கிவிட்டார், அந்த சால்மார் டான்சில். என்ன ஒரு எனர்ஜி... துள்ளல். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. பேயோடு அக்ரிமெண்ட் போடும் காட்சி, அதே பேயிடம் பின்னர் ப்ரெண்டாக முயற்சிப்பதும், உதவி கேட்பதும்.. நைஸ். வெல்கம் பேக் 'மைக்கேல் ஜாக்சன் ஆப் இந்தியா'!

   தமன்னாவுக்கு இதில் பஞ்ச் வசனம் கூட உண்டு. சாம்பிள்... 'ஒரு பொண்ணு அழகா இருந்தா ஆணை ஆளலாம். அறிவா இருந்தா நாட்டை ஆளலாம். அழகும், அறிவும் இருந்தா இந்த உலகையே ஆளலாம்!'

   சோனு சூட் ஒரு ஜென்டில்மேன் நடிகராக வந்து மனதைத் தொடுகிறார். ஆர்ஜே பாலாஜியின் ப்ளஸ் அவரது வேகமான உச்சரிப்புதான் என்றாலும், கிட்டத்தட்ட மோனோ ஆக்டிங் மாதிரி இருக்கிறது. கொஞ்சம் நடிங்க பாஸ்!

   ஒளிப்பதிவு ஓகே. இசைதான் மூன்று மொழிகளுக்கும் சேர்த்து மையமாகப் போட்ட மாதிரி ஒட்டாமல் நிற்கிறது. பிரபு தேவா நடனம்தான் அந்த இரு பாடல்களையும் பார்க்க வைக்கிறது.

   சுவாரஸ்யமான கதைதான். ஆனால் நீளமாக இழுத்துக் கொண்டே போகும் காட்சிகளை தயவு தாட்சண்யமின்றி இயக்குநர் வெட்டித் தள்ளியிருக்கலாம்.

   ஆனாலும் ஒரு டீசன்டான பேய்ப்படம் பார்க்க தேவி போகலாம் என்று சொல்ல வைத்திருக்கிறார்கள் இயக்குநர் விஜய்யும் பிரபு தேவாவும்!