twitter
    Tamil»Movies»Dha Dha 87»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • யாரும் சொல்லத் துணியாத ஒரு கதையை கையில் எடுத்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நடிகர்களும் சிறப்பு. காவல் உதவி ஆய்வாளர் காட்டானாக இயக்குனரே நடித்திருக்கிறார். காதல், திருமணம் என்பது காமத்துடன் முடிந்துவிடுவதில்லை என்பதை, வெவ்வேறு வயதினரை கொண்டு உணர்த்த முயன்றிருக்கிறார். 'வெறும் ஐஞ்சு நிமிஷ சுகத்துடன் உன் காதல் முடிஞ்சிருதில்ல' என பாண்டியை பார்த்து ஜெனி கேட்கும் போது, படத்தின் சாராம்சத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

      இடைவேளை வரைக்குமான முதல் பாதி படத்தின் காட்சிகள் ஏனோ தானோவென நகர்கிறது. இடைவேளைக்கு பிறகு ஜெனி யார் என்பது தெரிந்தவுடன் தான் சுவாரஸ்யம் பற்றிக்கொள்கிறது. அதன் பிறகான காட்சிகள் மிகச் சிறப்பு. அதேநேரம் சைட்கேப்பில், கமலின் சத்யா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை படத்தில் சேர்த்திருக்கிறார். வயசான கமலாக சாருஹாசனும், வயசான அமலாவாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா. எப்டி பாஸ் இப்டி எல்லாம் யோசிக்கிறீங்க.