twitter
    Tamil»Movies»Dharmaprabhu
    தர்மபிரபு

    தர்மபிரபு

    U | 2 hrs 27 mins | Comedy
    Release Date : 28 Jun 2019
    3/5
    Critics Rating
    4/5
    Audience Review
    தர்மபிரபு இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ரங்கநாதன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

    கதை 

    எமலோகத்து அரசனாக இருக்கும் ராதாரவி தனது முதுமையின் காரணமாக தன் அதிகாரத்தை மனைவி ரேகாவின் உதவியோடு தன் மகன் யோகி பாபுவிடம் ஒப்படைக்கிறார். அரியணை, ஆட்சி என இதில் பெரும் ஈடுபாடு...
    • முத்துக்குமரன்
      முத்துக்குமரன்
      Director
    • ரங்கநாதன்
      ரங்கநாதன்
      Producer
    • ஜஸ்டின் பிரபாகரன்
      ஜஸ்டின் பிரபாகரன்
      Music Director
    • பில்மிபீட்
      3/5
      யோகி பாபுவை எமலோகத்தில் அமரவைத்து, பூலோகத்தை செம கலாய் கலாய்த்திருக்கிறார் இயக்குனர் முத்துகுமரன். அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, பாஜக என அனைத்து கட்சியையும் வெச்சு செய்திருக்கிறார்கள். யோகி பாபுவை ஹீரோவாக வைத்து, அரசியல் நையாண்டி படம் எடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் முத்துகுமரன்.

      'டயர் நக்கி அமைச்சர்கள்', 'கூவத்தூர் மந்திரி புத்தி' என வசனங்கள் முழுவதும் அரசியல் நெடி உச்சத்தில் இருக்கிறது. யோசிக்காமல் செம கலாய் கலாய்த்திருக்கிறார் யோகி பாபு. சத்யாநந்தா, ஜிபிஎஸ், ஐயா என கேரக்டர்களின் பெயர்களிலும் செம நக்கல் தான்.

      வழக்கம் போல தனது பஞ்ச் வசனங்களால் தியேட்டரை அலறவிடுகிறார் யோகி பாபு. கவுண்டமணி, வினுசக்கரவர்த்திக்கு பிறகு எமன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கதையின் நாயகனாக யோகி பாபுவுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகளை நிச்சயம் ஏற்படுத்திக்கொடுக்கும் தர்மபிரபு...