twitter
    Tamil»Movies»Dhilluku Dhuddu 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • லாஜிக், நம்பகத்தன்மை என ஒரு வழக்கமான சினிமாவுக்கு தேவைப்படும் அத்தனை அம்சங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள படம் இது.

      ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளிவந்த பேய் - காமெடி படக் கதைகளில் ஒன்று தான் இது. ஆனால் தங்களது ஸ்டைலில் கலாய் கலாய் என கலாத்து பேயையே அலற வைத்திருக்கிறார்கள் இயக்குநர் ராம்பாலாவும், சந்தானமும். போதாக்குறைக்கு அவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும், ஊர்வசியும் சேர்ந்துகொள்ள, கேட்கவா வேண்டும் தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது.

      எப்படி இருந்தாலும், தில்லுக்கு துட்டு காமெடி வேட்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கவலை மறந்து சிரிக்க, தியேட்டருக்கு போய்ப் பார்க்கலாம். நிச்சயம் இந்தப் பேய் உங்களைக் கனவிலும் வந்து சிரிக்க வைக்கும்