twitter
    Tamil»Movies»Diya»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தன் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க குடும்பத்தினர் திட்டமிடும்போது பதைபதைப்பது, தன் கணவன் உயிரைக் காப்பாற்றத் துடிப்பது, முதல்முறை தனது மகள் இருப்பது தெரிந்து இனம்புரியாத உணர்வில் அழுவது, தியா தியா என்று அழைத்து குழந்தை இருப்பதை உணர்ந்து புன்னகைப்பது என தமிழில் முதல் அறிமுகத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சாய் பல்லவி. கொடுத்த கேரக்டரில் திருப்தியாக நடித்திருக்கிறார் நாக சௌரியா. குழந்தை தியாவாக வரும் பேபி வெரோனிகாவின் சலனமில்லாத பார்வையும், க்யூட்னெஸ்ஸும் மனதில் பதிகிறது.

      நாக சௌரியாவின் அப்பாவாக நிழல்கள் ரவி, சாய் பல்லவியின் அம்மாவாக ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இருவரின் அடுத்தடுத்த கொலை, குடும்பத்தினரை அதிர்ச்சியாக்குகிறது. பிறகு, குடும்ப டாக்டரும் பலியாக, அதில் இருக்கும் சில ஒற்றுமைகளால் இதில் ஏதோ சிக்கல் இருப்பதை உணர்கிறார் சாய் பல்லவி. பிறகுதான் அந்த அமானுஷ்யத்தை தெரிந்துகொள்கிறார் சாய் பல்லவி. பின்னர், தனது மாமாவின் இறப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் அவர், தனது கணவனைக் காப்பாற்ற அவர் துடிக்கும் காட்சிகளில் காதலின் மாயம்.

      நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் அலட்டல் திகட்டல் இல்லாத காட்சி அமைப்புகள். சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை, கதைக்கேற்றபடி மிரட்டல் இல்லாத அமைதியான ஓட்டம். பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஹாரர் திரைக்கதையில் வெகு சாஃப்ட்டான ஒரு படத்தை எடுத்திருப்பது நல்ல முயற்சி. அடுத்தடுத்து என்ன நடக்கும் என எளிதாக யூகிக்க முடிகிற விதமாகவும், ஆரம்பத்திலேயே பழிவாங்கலுக்கான காரணம் தெரிவதும் கொஞ்சம் மைனஸ். திரைக்கதையில் இன்னும் சஸ்பென்ஸ் கூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.