twitter

    விமர்சகர்கள் கருத்து

    • இரு திரில்லர் ஆக்ஷன் படத்துக்கு தேவையான சுவாரஸ்யமான திரைக்கதையை சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் சர்ஜுன். யூடியூபில் டிரெண்டிங் ஆன லஷ்மி, மா குறும்படங்களை இயக்கிய அதே சர்ஜுன் தான். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதை பெருமளவுக்கு செய்தும் காட்டியிருக்கிறார்.

      படத்தில் காமெடிக்காக யோகி பாபு. ஆனால் சிரிக்க தான் முடியவில்லை. முந்தைய படங்களில் மாஸ் காமெடி செய்த யோகி பாபுவா இது என நினைக்க வைக்கிறது. உங்கக்கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம் 'ச்சைல்டு'.

      சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவும், விஜய் ஆதினாதனின் கலையும் படத்தை வேற லெவலக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதேபோல கார்த்திக் ஜோகேஷின் படத்தொகுப்பு படத்தை இம்மிபிசகவிடாமல், திரில்லிங் அனுபவத்தை தக்க வைத்திருக்கிறது. பாடல் காட்சியின் போதுகூட எழுந்துபோக மனம் வரவில்லை.

      ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அழைத்த உடனேயே, அத்தனை காவல்துறையினரும் உடனடியாக வந்துவிடுவார்களா என்ன?. அதுவும் வீட்டில் அமர்ந்தபடி பத்து ஈசிஆரில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை எல்லாம் அலசி ஆராய்வது 'உஸ்ஸ்ஸ்ஸ்....' முடியல. க்ளைமாக்ஸ் காட்சியும் ஏதோ திணிக்கப்பட்டது போன்றே இருக்கிறது.