twitter

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு சில படங்களில் ஏற்கனவே ஹீரோயினாக நடித்திருக்கும் மனிஷாஜித் தான் இதிலும் நாயகி. ஜெகனை ஏங்கவிட்டு, சூடேற்றி கிரங்க வைக்கிறார். இவரை தவிர டிசோஷா என்பவர் இரண்டாவது நாயகியாக படத்தில் வருகிறார். தைரியசாலி பெண்ணாக வந்து கவர்கிறார். நிறைய வசனம் பேசி, வில்லனிடம் அடிவாங்கி, அப்பாவி பத்திரிகையாளராக நடித்துள்ளார் 'குட்டி' விவேக்.

      வில்லன் வேடம் ஏற்றிருக்கும் கவிஞர் பிறைசூடனின் உடல்மொழி அந்த ரோலுக்கு சுத்தமாக செட்டாகவில்லை. காமெடி என்ற பெயரில் சாம்ஸ் செய்யும் அலப்பறைகள், சிரிப்புக்கு பதில் கடுப்பை தான் ஏற்றுகிறது. ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி குஷிப்படுத்துகிறார் நடிகை அஷ்மிதா.

      நிகழ்கால அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருந்தாலும், 1980- களில் எடுக்கப்பட்ட படம் போன்ற உணர்வையே அளிக்கிறது படத்தின் மேக்கிங். ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத காட்சிகளும், பலவீனமான திரைக்கதையும் படத்தின் மைனஸ். சிவாவின் ஒளிப்பதிவு இன்னும் தரமாக இருந்திருக்கலாம்.