twitter
    Tamil»Movies»Enga Kattula Mazhai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • குள்ள நரிக்கூட்டம் படத்திற்கு பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து ஸ்ரீ பாலாஜி இயக்கி இருக்கும் படம் எங்க காட்டுல மழை. முந்தைய படத்தை போலவே இதையும் ஜாலியாக சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால் படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருப்பதால் அலுப்பு தான் வருகிறது.

      அப்புக்குட்டியும் அவரது பெட் நாய் ரோமியோவும் காமெடி செய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் பழைய தேவர் பிலீம்ஸ் காலத்துலேயே பார்த்துவிட்டதால் சிரிப்புக்கு பதில் சலிப்பு தான் வருகிறது.

      சும்மா வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுபவன் கையில் கிடைத்த இந்த தொகை, நல்ல உழைப்பாளியின் கிடைத்திருந்தால் அடைமழையாக பெய்திருக்கும்.