twitter
    Tamil»Movies»Ezhumin
    எழுமின்

    எழுமின்

    U | Action
    Release Date : 18 Oct 2018
    3/5
    Critics Rating
    Audience Review
    எழுமின் இயக்குனர் விபி விஜி இயக்கத்தில், விவேக், தேவயானி மற்றும் பலர்  நடிக்கும் அதிரடி திரைப்படம்.

    கதை : 

    தொழிலதிபர் விஸ்வநாதன் (விவேக்)- பாரதி (தேவயானி) தம்பதியின் ஒரே மகன் அர்ஜுன் (சுகேஷ்). குத்துச்சண்டையில் வல்லவனாக திகழும் அர்ஜுனை போற்றி வளர்க்கிறார்கள் விவேக்கும் தேவயானியும். அர்ஜுனின் ஏழை நண்பர்களான அஜய் (பிரவீண்), கவின் (ஸ்ரீஜித்), வினித் (வினித்), ஆதிரா (கிருத்திகா), சாரா (தீபிகா) ஆகியோரும் தற்காப்பு கலைகளில் வல்லவர்கள்.

    ஆனால் இவர்களுக்கு தற்காப்பு கலையை தொடர்ந்து கற்க குடும்ப பொருளாதார சூழல்...
    • விபி விஜி
      விபி விஜி
      Director
    • tamil.filmibeat.com
      3/5
      ஆபாசம், கவர்ச்சி, இரட்டை அர்த்த காமெடி வசனங்கள் என வழக்கமான கமர்சியல் சினிமாவாக இல்லாமல், குழந்தைகளுக்கான திரைப்படம் ஒன்றை எடுத்ததற்காகவே இயக்குனர் விஜிக்கு மிகப்பெரிய பாராட்டுகள். குழந்தைகளுக்கான கேளிக்கையாக மட்டும் இல்லாமல், நல்ல செய்தி ஒன்றை சொல்கிறது எழுமின்.

      வழக்கமான ஸ்போர்ட்ஸ் பட பார்முலாவுக்குள் படத்தை நகர்த்தாமல், மாணவர்கள் கற்கும் தற்காப்பு கலை நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு எப்படி உதவுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு. நிறைய விஷயங்களை ரிஸ்க் எடுத்து செய்திருக்கிறார்கள்.

      காமெடி ஹீரோவான விவேக்குக்கு இது புதிய பரிமாணம். மகன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கும் அவர், அவனை இழக்கும் போது வெளிப்படுத்தும் உணர்வுகள் நம் கண்ணில் கண்ணீர் வரவழைக்கின்றன. நிஜ வாழ்க்கையில் அவர் எப்படி தவிக்கிறார் என்பதை திரையிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். பல இட..