twitter

    விமர்சகர்கள் கருத்து

    • ஹீரோயின் தேவிகாவுக்கு படத்தில் பெரிதாக வேலை எதுவும் இல்லை. கிராமத்து பெண் போல் லட்சணமாக இருக்கிறார். வில்லன் கட்டாரியாக வரும் விஜயன், நன்றாகவே மிரட்டியிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கெத்து காட்டுகிறார்.

      ஒரு சாதாரண விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதனை சஸ்பென்ஸ் படமாகவும், காமெடி படமாகவும் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ரதீஷ் இரேட். ஆனால் படம் திரில்லிங்காவும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் சொதப்பலாகிவிட்டது. மோசமான காட்சியமைப்பும், திரைக்கதையும் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

      ஓவியா படத்தை போஸ்டரில் போட்டு ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிடலாம் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவரது கதாபாத்திரமும் வலுவாக இல்லாததால், அந்த ஐடியாவும் ஒர்கவுட் ஆகவில்லை.